ஜேர்மன் போலீஸ் படையில் நவ-நாஜி வலையமைப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் மாநிலமான ஹெஸ்ஸ இன் போலீசில் நவ-நாஜி வலையமைப்பு முன்னர் அறிந்திருந்ததைவிடவும் அதிகமாகி உள்ளது. இதுவரை, பிராங்க்ஃபேர்ட் நகர மையத்தில் இருந்து நான்கு ஆண் மற்றும் ஒரு பெண் போலீஸ்காரருக்கு எதிராக விசாரணை இருந்திருக்கிறது அவர்கள் ஒரு அரட்டை குழுவில் நவ-நாஜி இலட்சினையை பரிமாறியவர்கள் என்றும் வழக்கறிஞர் Seda Basay-Yildiz ஐ அச்சுறுத்தும் கடிதத்துக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நவ-நாஜி பயங்கரவாத குழு NSU வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதேபோல சட்டவிரோதமாக துனிசியாவுக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய சமி. A க்கும் ஆதரவுகாட்டிய வழக்கறிஞரான அப்பெண் இனவாத களங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டார், அவரது இரண்டு வயது குழந்தை தொலைநகல் வழி “கொலைசெய்யப்படுவதாக” அச்சுறுத்தப்பட்டது, அது “NSU 2.0” ஆல் கையொப்பமிடப்பட்டிருந்தது.

இப்பொழுது ஜேர்மன் நாளிதழான FAZ, Marburg-Biedenkopf மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் நவ-நாஜி தொடர்பில் தேடுதல்வேட்டைக்கு ஆளானதாக செய்தி அறிவிக்கிறது மற்றும் ஏனைய போலீஸ் நிலையங்களிலும் மேலும் சந்தேகப்படும் வழக்குகள், போலீசால் உள் ஆய்வுக்குள்ளாக்கப்படுவதாகவும் செய்தி அறிவித்தது. பாராளுமன்றத்தில் உள்விவகாரங்கள் பற்றிப் பேசும் பசுமைக் கட்சிப் பேச்சாளரான Irene Mihalic போலீஸ்காரர்கள் அவர்களை ஒத்தவர்களுடன் தேசிய அளவில் வலையமைப்பை கொண்டுள்ளார்களா என புலனாயுமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், அனைத்துவகையான அரசியல்வாதிகளும் இது ஏதோவிதிவிலக்கான ஒற்றை விடயம் என்பதுபோல பாசாங்குத்தனமான மயக்கமூட்டும் ஆச்சரியம் மற்றும் சீற்றம் உடையவராய் இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் பற்றி அமுக்கி வாசிக்க முயல்கின்றனர்.

போலீசுக்கு உள்துறைப் பொறுப்பாக இருந்த ஹெஸ்ஸ அமைச்சர் Peter Beuth (CDU),“யார் செய்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எந்தவிதமான தவறான நடத்தையும் கடுமையான தண்டனைக்குள்ளாகும்” என வலியுறுத்தினார். பாராளுமன்றத்தின் CDU உறுப்பினரான Mathias Middelberg பொதுச் சந்தேகத்தின் கீழ் போலீஸ் வைக்கப்படுவதற்கு எதிராக எச்சரித்தார், “எமது போலீசார் இடது பக்கமாக இருக்கையில் வலது கண் சற்றே குருட்டுத்தனமாக இருக்கிறது” என்றார். கவலைப்படும் குற்றச்சாட்டுக்களை தகுதிவாய்ந்த அதிகாரத்தினர் பின்பற்றிக் கொண்டிருந்தனர் என அவர் உறுதிபடக் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஹெஸ்ஸ இல் CDU உடன் சேர்ந்து கூட்டரசாங்கத்தை ஆளும் பசுமைக் கட்சியாளருமான Omid Nouripour உம் கூட போலீசைப் பாதுகாத்தார். அவர் “முன்கூட்டிய தீர்ப்புக்கு” எச்சரித்தார். “தங்களது கடமைகளின் எல்லைகளுக்கும் அப்பால் பெரும்பாலும் வேலைசெய்யும், ஆயிரக்கணக்கான போலீசாரின் வேலை மிகத் தாழ்நிலைக்கு கொண்டுவரப்படக் கூடாது” என்றார்.

உண்மையில், போலீசுக்குள்ளே —அதேபோல இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைக்குள்— வலதுசாரி தீவிரக் கட்டமைப்பு இருப்பது நன்கு அறிந்ததே. நவம்பரில்தான் Focus செய்தி இதழ், சுமார் 200 முன்னாள் மற்றும் செயலூக்கமான ஜேர்மன் இராணுவ படைவீரர்களை கொண்டிருக்கும் மற்றும் சிறப்புப் படைப்புப் பிரிவுக்கும் (KSK) இராணுவ எதிர் உளவுச் சேவை (MAD) க்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவ லெப்டினன்ட் Franco A ஐ சுற்றிய பயங்கரவாத செல் பற்றி அம்பலப்படுத்தியது.

ஆயினும், வலதுசாரி தீவிரப்போக்கின் வலைப்பின்னல் முறையாக மூடப்பட்டிருக்கின்றன, மற்றும் பொறுப்புள்ள அரசியல்வாதிகள், மேலாளுமை செய்பவர்கள் மற்றும் நீதிமன்றங்களால் மறைக்கப்பட்டு முன்னுக்குக் கொண்டுவரப்படுகின்றன. போலீசில் உள்ள வலதுசாரி தீவிரவாதத்தின் பல எடுத்துக்காட்டுகளில் சில இங்கே உள்ளன:

- பேர்லின் போலீஸ் கமிஷனர் Andreas T சுவஸ்திகா, ரூன் மீதான SS வெற்றி மற்றும் அவரது மேல் அங்கத்தில் Horst-Wessel-Lied பச்சை குத்தப்பட்டு குறிப்புக்கள் ஆகியவற்றை வைத்திருந்தார் மற்றும் சட்டமிடப்பட்ட அடோல்ஃப் ஹிட்லர் மற்றும் ருடோல்ஃ ஹெஸ் படங்கள் அவரது வீட்டில் தொங்கிக் கொண்டிருந்தன. 2007ல் அவர் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார், அடுத்த பத்து ஆண்டுகள் அவரது முழுச் சம்பளத்தையும் பெற்றார், ஏனெனில் நிர்வாக நீதிமன்றமும் உயர் நிர்வாக நீதிமன்றமும் ஒரு அரசு ஊழியர் என்ற முறையில் அவரது கடமைகளை அவர் மீறி இருக்கவில்லை என்று முடிவு செய்திருந்தன.

- பேர்லின் போலீஸ் அதிகாரி மற்றும் அரசின் பாதுகாப்பாளர் Edmund H, 2014ல் சக ஊழியர்கள் 21 பேருக்கு சுவஸ்திகாவுடன், சாண்டா உடைக்குள் அடோல்ஃப் ஹிட்லர், “Ho-Ho-Holocaust” என்ற சுலோகங்களுடன், சுவாஸ்திக்கா கொடியையும் சேர்த்து கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய பின்னர், 2,750 யூரோக்கள் தண்டத் தொகை விதிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.

- 2000 மற்றும் 2007க்கு இடையில் ஒன்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் போலீஸ் அதிகாரியைப் படுகொலை செய்த தேசிய சோசலிச தலைமறைவு இயக்கத்தின் அடுத்த நடுத்தரத் தட்டில், இரகசிய சேவை மற்றும் போலீசில் இருந்து குறைந்தபட்சம் இரண்டு டசின் உளவு சொல்பவர்கள் இருந்தனர். அவர்களது பாத்திரம் ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவில்லை மற்றும் நீதிமன்றம் முன்பும் கூட சோதிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. Kassel இல் ஒரு இண்டர்நெட் கஃபேயில் Halit Yozgat படுகொலை செய்யப்பட்டபொழுது, ஹெஸ்ஸ இரகசிய சேவைப் பணியாளர் Andreas Temme அங்கிருந்தார். அவர் அப்போதைய ஹெஸ்ஸ அமைச்சரும் இப்போது பிரதமரும் ஆன Volker Bouffier (CDU) ஆல் பாதுகாக்கப்பட்டார்.

- மிகைப்படுத்தப்பட்ட கொலோன் 2015 / 16 புத்தாண்டு நிகழ்வுக்குப் பின்னர் ஒரு ஆண்டு கழித்து கொலோன் போலீஸ் முறையாக நடத்தப்பட்ட இனவாத முத்திரை குத்தலின்போது, அந்நிய தோற்றமுடைய நபர்களை தோராயமாகப் பிடித்து சோதித்தபொழுது, Süddeutsche Zeitung இன் ஆன்லைன் இளைஞர் இதழான jetzt, போலீசார் மத்தியில் வன்முறை தூண்டலுக்கான பரவலான இனவாதம் மற்றும் அழிவுகரமான படத்தை வரைந்த ஒரு போலீசின் நேர்காணலை வெளியிட்டது.

ஹம்பேர்க்கில் G20 ஆர்ப்பாட்டத்தில் விரிவாக்கப்பட்ட “நரகத்திற்கு வருக” என்பது “வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் ஒரு கூடுதல் வன்முறை” யாக இருந்தது, அது போலீசாலுமானது என்று போலீஸ்காரர் கூறினார். ஹம்பேர்க்கின் அப்போதைய மேயரும் தற்போதைய துணைமுதல்வரும் ஆன Olaf Scholz (SPD) இப்பொழுது “எழுந்து நின்று அங்கு போலீஸ் வன்முறை இல்லை” என்று கூறினார்; ஆனால் இது அறியாமையாகும். இறுதியாக போலீசால் முன்னெடுக்கப்பட்ட போலீசிற்கு எதிரான 30 புலன் விசாரணைகள் “சட்டவிரோத தாக்குதல்களின் உண்மையான எண்ணிக்கைக்கு மொத்தமாய் ஒத்திசைவானதாய் இல்லை.”

ஜி-20 உச்சி மாட்டின்பொழுது போலீசால் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் “இடது தீவிரவாதிகளுக்கு” எதிரான முறையான அவதூறு பிரச்சாரத்திற்கு அடிப்படையை அமைத்தது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான தங்களது உரிமையையைத் தவிர வேறொன்றும் செய்திராத இளைஞர்கள் மீது கடும் தண்டனைகளுக்கான அடிப்படையையும் அமைத்தது.

- ஹம்பேர்க் போலீஸ் கல்விக் கழகத்தில் போலீஸ் அறிவியல் பேராசிரியர் Rafael Behr, போலீஸ் அதிகாரியைப் பற்றி அனாமதேய அறிக்கைகளை உறுதிப்படுத்தியதுடன் ஏன் அத்தகைய நிலைமைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்ற என்பதையும் விளக்கினார். Behr-ன் படி, இக்கூற்றைச் செய்த போலீஸ்காரர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவரும் கூட குற்றம்சாட்டப்படலாம். அவர் ஒரு அவதூறு வழக்குடன் கணைக்கிட வேண்டிவரும், - சிவில் சேவை சட்டம் போலீசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்ளே நடக்கும் தகவல்களை வெளிப்படுத்தலைத் தடுக்கிறது. அவரும் கூட போலீஸ் படையால் வேட்டையாடப்படுவார். “தோழர்களைக் காட்டிக்கொடுப்பது மரணத்திற்குரிய பாவம்”

- தேர்தல்கள் இரகசிய வாக்குச்சீட்டு மூலம் நடப்பதன் காரணமாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை என்றபோதிலும், பல்வேறு குறிகாட்டல்கள் சராசரி எண்ணிக்கைக்கும் அதிகமானவர்கள் AfD க்காக வாக்களிப்பதாகக் காட்டுகின்றன. மேலும் அதி தீவிர வலதுசாரிக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் மத்தியில் எண்ணிறைந்த போலீஸ் அதிகாரிகள் இருக்கின்றனர்.

Mecklenburg-Western Pomerania மாநில பாராளுமன்றத்தில் AfD – பாராளுமன்றக் குழுவின் தலைவர் Nikolaus Kramer ஒரு போலீஸ் சூப்பிரண்டண்ட். அவர் தேசியவாத கோத்தியா சகோதரத்துவம் இன் ஒரு உறுப்பினர் மற்றும் Identitarian நடவடிக்கைகளை ஆதரிப்பவர். அவர் 2017 கோடைகாலத்தில் “ஒரு கறுப்புத் தொகுதி எப்போதும் மோசமாக இருப்பதில்லை” என்ற எழுத்துக்களுடன் Leibstandarte SS Adolf Hitler படத்தை, உள்ளேயான AfD அரட்டைப் பகுதியில் பரிமாறிக் கொண்டார்.

Thuringia வில், (LKA) மாநில பொலீஸ் குற்றவியல் அலுவலக பத்திரிகைக்கான பேச்சாளர் Ringo Mühlmann இரண்டாண்டுகளாக AfD-ன் மாநில நிர்வாக உறுப்பினராக இருந்து வந்திருக்கிற1ர். Solingen இல் மாநில காவல்துறை ஆணையாளராக North Rhine-Westphalia இல் Junge Alternative இன் தலைவராக உள்ளார். சான்செலர் மேர்க்கெலை “குழந்தை” என்றும் “குற்றவாளி” என்று விவரிக்கையில் அவதூறில் இவர் சிக்கினார்.

இந்தப் பட்டியல் முடிவின்றித் தொடரக்கூடியது.

போலீசுக்குள் அதிவலது போக்கினரின் வலுவான நிலை மற்றும் AfD க்குள் பேரளவில் போலீசார் இருப்பதை, போலீஸ்காரர்கள் சட்டம் ஒழுங்கு கொள்கைகளின்பால் சாய்ந்து விட்டனர் என்றவாறு தனிப்பட்ட நோக்கங்களாக விவரிக்க முடியாது,. அவர்கள் முறையாக அரசியல்வாதிகள், ஊடகம் மற்றும் அரசால் முன்னுக்குக் கொண்டுவரப்படுவதுடன் மூடிமறைக்கப்படுகிறார்கள், எனெனில் ஆளும் வர்க்கம் வளர்ந்துவரும் சமூகப் பதட்டங்கள், சர்வதேச மோதல்கள் மற்றும் பொருளாதார எழுச்சிகளை முகம்கொடுக்கையில் 1930களின் ஆட்சி வழிமுறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்ப் பாதுகாப்பற்ற அகதிகளுக்கு எதிராக மெக்சிகன் எல்லையில் அணிவகுக்கும் இராணுவத்தைக் கொண்டிருந்தார். பிரான்சில் ஜனாதிபதி மக்ரோன் மஞ்சள் சீருடை எதிர்ப்புக்களுக்கு எதிராக 90,000 நன்கு ஆயுதம் தரித்த போலீசாரை இறக்கினார். ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி தீவிரவாதிகள் ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ளனர், அதேவேளை பிரான்சிலும் ஜேர்மனியிலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உள்ளனர். துருக்கி, எகிப்பது, ரஷ்யா மற்றும் பல நாடுகளில் அரசியல் ஒடுக்குமுறை மிருகத்தனமான வடிவங்களில் இடம்பெறுகின்றன.

சோசலிச சமத்துவ கட்சியின் (SGP) துணைத்தலைவர் கிறிதோப் வாண்ட்ரேயர், “Warum sind sie wieder da?” (அவர்கள் ஏன் மீண்டும் திரும்பி வந்துள்ளனர்?) என்ற நூலில், பல்கலைக்கழக மட்டங்களில் கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக எப்படி வலதுக்கு நகர்வு தயார் செய்யப்பட்டது என்பதைக் கவனமாக கண்டுபிடித்தார். SGP மற்றும் அதன் இளைஞர் அமைப்பான IYSSE இந்த எந்திரமயப்படலை வெளிக் கொண்டு வந்து, அவர்களுக்கு எதிராக அணிதிரண்ட இவர்கள், இரகசிய உளவு சேவையின் குறுக்கு வழிகள் மற்றும் நவ-நாஜி வலைப்பின்னல்களை கண்டுகொண்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேர்லினில் உள்ள Humboldt பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற IYSSE கூட்டத்தை வலதுசாரி தீவிரப் போக்கினர் குலைத்தனர். தொந்திரவுசெய்தவர்களுள் AfD இளைஞர் அமைப்பு, Identitarian இயக்கம், மற்றும் Gothia fraternity உறுப்பினர்கள் இருந்தனர். வலதுசாரிக் கும்பலைத் தூண்டி விட்டது அதிவலதுசாரி Humboldt பேராசிரியர் Jörg Baberowski ஆவார்.

மக்களின் பரந்த பெரும்பான்மையினர் வலதுக்கு நகருதலை வெறுப்பு மற்றும் நிராகரிப்புடன் எதிர்ச் செயலாற்றுகின்றனர். IYSSE மீதான தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னரே Humboldt இன் பாராளுமன்றம் (StuPa) IYSSE மீதான வலதுசாரி தீவிரவாதிகளின் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளில், வலதுக்கு ஏற்பட்ட பரந்த எதிர்ப்பானது ஒரு சிறு வெளிப்பாட்டைக் கூட கண்டறியவில்லை. NSU அவதூறு மற்றும் கெம்னிஸ்ட்டில் வலதுசாரி தீவிரவாதிகளின் அணிவகுப்புக்கு இரகசிய சேவையின் தலைவர் Hans-Georg Maassen இன் பதிலானது இரகசிய சேவையைப் பலப்படுத்துவதும் மையப்படுத்துவதுமாய் இருந்தது; போலீசில் நவ-நாஜி வலைப்பின்னலுக்கு பதில் இன்னும் அதிக போலீசை அழைப்பதாக இருந்தது. இது இடது கட்சிக்கும் பொருந்தும்.

வலதுசாரி அபாயத்திற்கு எதிரான போராட்டமானது, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பவற்றில் இருந்து பிரிக்கவியலாதவை. சமூக நெருக்கடிக்குக் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கம் ஒன்று அவற்றுக்குத் தேவைப்படுகிறது.

அத்தகைய இயக்கத்திற்கான புறநிலலை நிபந்தனைகள் உலகெலாம் தொழிற் தகராறுகள் மற்றும் எதிர்ப்புக்களில் ஏற்படும் அதிகரிப்பால் எடுத்துக்காட்டியவாறு, வேகமாக வளர்ந்து வருகின்றன, ஆனால் அதற்கு ஒரு வேலைத்திட்டம், ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் தலைமை தேவைப்படுகிறது. அதன் பொருள் SGP யையும் உலகெங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளையும் கட்டி எழுப்புவதாகும்.

Loading