மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
திங்கள்கிழமை இரவு நடந்த ஒரு மோதலில் டஜன் கணக்கான இந்திய இராணுவ மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இது உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்டதும் போட்டி அணு ஆயுத சக்திகளுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் வெடிப்பதற்கான வாய்ப்பை தோற்றுவித்துள்ளது.
மோதலுக்குப் பின்னர், பெய்ஜிங் மற்றும் புது தில்லி ஆகிய இரண்டும் தங்களது சர்ச்சைக்குரிய எல்லையில், நெருங்கிய நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவப் படைகளை கலைந்து போகச் செய்வதிலும் அவர்களின் போட்டி பிராந்திய உரிமை கோரல்களுக்கு அமைதியான இராஜதந்திர தீர்வு காண்பதற்கும் உறுதியளித்துள்ளன. ஆனால் ஒவ்வொரு தரப்பும் மற்றைய தரப்புத்தான் மோதலைத் தூண்டிவிட்டது என்றும் இறங்கி நகர்ந்து செல்லவேண்டும் என்று கூறுவதிலும் விடாப்பிடியாக உள்ளன – இந்த மோதல் கடந்த 45 ஆண்டுகளில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான முதல் அபாயகரமான எதிர்ப்படுதலாகும்.
இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது சீன சமதரப்பினரான வாங் யி இடையே புதன்கிழமை ஒரு தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, புதுடெல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், "வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு" பெய்ஜிங் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியது, மேலும் "காலத்தின் கட்டாயம்" என்னவென்றால் ”சீனத்தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”
இதனை பெய்ஜிங் ஒரு அறிக்கையுடன் எதிர்கொண்டது, இந்திய இராணுவத்தின் "வன்முறை" மற்றும் "சாகச" நடத்தைக்கான "பொறுப்பாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" மற்றும் ”முன்னணி துருப்புக்களை" அது “கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று வாங் கூறியதாக குறிப்பிட்டது. மேலும் அந்த அறிக்கை “அதன் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான, சீனாவின் மன உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது" என்று குறிப்பிட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி மற்றும் இராணுவ உயர் தலைமைக்கு இடையே நேற்று நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, சீனாவுடனான தனது சர்ச்சைக்குரிய எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இராணுவ மற்றும் விமானப்படையினர்களின் உஷார் நிலையை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. இதற்கிடையில், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்கான சாத்தியத்திற்கு தயாராகுமாறு இந்திய கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதன்கிழமை, இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க பிரதமரான நரேந்திர மோடி ஒரு தொலைக்காட்சி உரையை வழங்கினார், அதில் அவர் “எங்கள் வீரர்களின் தியாகம் வீணாகாது... இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால் இந்தியா ஒரு தகுதியான பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது” என்று சூளுரைத்தார்.
இந்தியா மற்றும் சீனாவின் சர்ச்சைக்குரிய 3,500 கிலோமீட்டர் (2,175 மைல்) எல்லை, வரவேற்காத இமயமலை நிலப்பரப்பு வழியாக ஊடுருவி செல்கிறது. திங்கள்கிழமை இரவு சண்டை கடல் மட்டத்திலிருந்து 4,260 மீட்டர் (14,000 அடி) உயரத்தில் ஒரு குறுகலான ஒரு மலைப்பாதையில் நடந்தது.
எவ்வாறாயினும், உலக முதலாளித்துவத்தின் முறையான முறிவு மற்றும் அதன் விளைவாக ஏகாதிபத்திய மற்றும் பெரும்-சக்தி மோதலின் எழுச்சி ஆகியவற்றின் நிலைமைகளின் கீழ், சீன-இந்திய எல்லை தகராறு அமெரிக்க-சீன மூலோபாய போட்டிகளுக்குள் சிக்கியள்ளது, அதுவே வெடித்தெழும் தன்மையை பெரிதும் சேர்த்துள்ளது. மேலும் அதற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை வழங்குகிறது.
இந்தியாவின் பேராசை கொண்ட முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு கடந்த ஒன்றரை தசாப்தங்களில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளது. மோடியின் கீழ், புது தில்லி தனது இராணுவத் தளங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்குத் திறந்து, வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் எப்போதும் விரிவடையும் வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது.
இதற்கு பதிலளித்த பெய்ஜிங், இந்தியாவின் வரலாற்று பரம எதிரியான பாகிஸ்தானுடனான அதன் நெருங்கிய பாதுகாப்பு பங்காண்மையை மேற்கு சீனாவிலிருந்து பாகிஸ்தானின் அரேபிய கடல் துறைமுகமான குவாடர் வரை குழாய், இரயில் மற்றும் சாலை இணைப்புகள் உட்பட்டவற்றை உருவாக்க முயற்சிக்கிறது, இது இந்திய பெருங்கடல் மற்றும் தென்சீனக் கடலில் கட்டுப்படுத்தும் புள்ளிகளைக் கைப்பற்றி சீனாவை பொருளாதார ரீதியாக கழுத்தை நெரிப்பதற்கான அமெரிக்க திட்டங்களை முறியடிக்கும் நோக்கம் கொண்டது. சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திங்கள்கிழமை சண்டை நடந்த இடத்திற்கு அருகே சீனாவின் அக்சய் சின் பகுதி வழியாக செல்கிறது. மோடியின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம், கடந்த ஆகஸ்டில் இந்தியாவிற்கு வரலாற்று உரிமை இருப்பதாக கோரிய கூற்றை, ஆத்திரமூட்டும் வகையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இன்றுவரை, திங்களன்று எல்லை மோதலுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பதில், மோதலை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் வலியை நீக்கும் அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய மாதத்தில், வாஷிங்டன் இந்தியாவுக்கு எதிரான சீன “ஆக்கிரமிப்பை” கண்டித்து புதுடெல்லியை பகிரங்கமாக ஆதரித்தது.
மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்து தரப்பு பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலை சீனாவுக்கு எதிரான பெரும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இதனை செய்தது, அதன் தர்க்கம் போரில் முடிவடைகிறது. இதில் பின்வருவன அடங்கும்:
* தனது சொந்த அலட்சியம் மற்றும் திறமையின்மை காரணமாக கோவிட் -19 இனால் அமெரிக்காவில் மிக அதிகளவில் உயிர் இழப்பு ஏற்பட்டதற்கு பெய்ஜிங்கைக் குற்றம் சாட்டுவது, இது மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியே, மேலும் அது பெய்ஜிங்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் நோக்கிலும் செய்யப்படுகிறது.
* கடந்த வாரம் மூன்று விமானம் தாங்கி தாக்கும் குழுக்களை மேற்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பி வைத்தது, அங்கு அவை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு அருகில் உள்ள நீரில் செயல்படும்.
* அமெரிக்க பொருளாதாரத்திலிருந்து சீனாவை விடுவிக்கும் உந்துதலில் ஈடுபட்டுள்ளது, அதற்காக அமெரிக்காவின் மூலோபாய நோக்கங்களுடன் இந்தியாவை மேலும் கட்டியணைத்து செல்லும் வகையில் சீனாவுக்கு வெளியே அவற்றின் நடவடிக்கைகளை நகர்த்துமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, ட்ரம்பும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவும் இந்தியாவை சீனாவுக்கு மாற்று பூகோள உற்பத்தி சங்கிலி மையமாக மிகவும் பகிரங்கமாக ஊக்குவித்துள்ளனர்.
* சீனாவின் முதன்மை உயர் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் யை அவர்களின் 5 ஜி நெட்வொர்க்குகளிலிருந்து தடைசெய்யவும் மற்றும் இல்லையெனில் உயர் தொழில்நுட்பத் தொழில்களில் போட்டியாளராக சீனாவின் தோற்றத்தைத் தடுக்கவும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
*தைவானுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்குவதுடன் "ஒரு சீனா என்ற கொள்கைக்கு" அதன் ஆதரவை நிராகரிக்க போவதாக மறைமுகமாக அச்சுறுத்துகிறது.
* மேலும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான ஒரு நடவடிக்கையில், ஒரு பெரிய அணு ஆயுதங்களை கட்டியெழுப்புவதில் முன்னேறி செல்கிறது.
இதனுடன், தொற்றுநோய்க்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மற்றும் வெனிசுவேலா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் மேற்குக் கரை முழுவதுமாக இணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதலானது, அமெரிக்க ஆக்கிரமிப்பு, நாடுகளுக்கு இடையேயான மோதல்களை ஏற்படுத்திய அல்லது மோசமாக்கிய உலகின் பல வெடிப்புப் புள்ளிகளில் ஒன்றாகும், இது உலகளாவிய மோதலுக்கான சாத்தியமான வினையூக்கியாக மாறக்கூடும்.
அதனை தண்டிக்கும் பொருளாதாரத் தடைகள் குறித்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ அல்லது எந்த வகையிலாவது தளர்த்தவோ அமெரிக்கா மறுத்ததால் கோபமடைந்த வட கொரியா திங்களன்று தென் கொரியாவுடனான தனது கூட்டு தொடர்பாடல் அலுவலகத்தை தகர்த்தது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய போட்டியாளர்களும், தங்கள் பங்கிற்கு, 1930 களின் மந்தநிலைக்குப் பின்னர், உலக முதலாளித்துவம் மிகப் பெரிய பொருளாதாரக் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் போருக்கான தங்கள் சொந்த தயாரிப்புகளை தீவிரப்படுத்தியதன் மூலம் பதிலிறுத்துள்ளன. ஜேர்மனி மற்றும் பிரான்ஸைப் பொறுத்தவரையில், இது ஒரு ஐரோப்பிய இராணுவத்தை அபிவிருத்தி செய்வதற்கான உந்துதலை விரைவுபடுத்துவதாக உள்ளது, இது சந்தைகள், இயற்கை வளங்கள் மற்றும் மூலோபாய பிராந்தியங்களுக்கான உரிமைகோரல்களை தனியாக அல்லது தேவைப்பட்டால் அமெரிக்காவிற்கு எதிராகவும் செய்யும்.
கடந்த வாரம் Die Welt இல் எழுதிய ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் மற்றும் உள்நாட்டு சந்தைக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி பிரெட்டன் "அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் பெருகிவரும் பதட்டங்கள்" ஐரோப்பிய "பலமான சக்தியின்" தேவையை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே ஐரோப்பா "அதன் செல்வாக்கை செலுத்தவும், அதன் உலகக் கண்ணோட்டத்தை திணிக்கவும், அதன் சொந்த நலன்களை நிலைநிறுத்தவும்" இதுவே உதவுகிறது.
கடந்த நான்கு தசாப்தங்களாக பூகோள முதலாளித்துவம் உலகம் முழுவதும் பரவியுள்ள அனைத்து தீங்குகள், குறிப்பாக 2008 முதல் சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் போரின் கொடூரமான வளர்ச்சி, ஜனநாயக ஆட்சி முறை நாற்றம் கண்டு இருப்பது மற்றும் முதலாளித்துவ உயரடுக்கின் எதிர்வினையை ஊக்குவித்தல் மற்றும் தீவிர வலதுசாரிகளை புனருத்தாரணம் செய்தல் ஆகியவற்றிற்கு COVID-19 தொற்றுநோய் ஒரு முடுக்கி விடும் காரணியாக செயல்பட்டுள்ளது.
இது பூகோள வர்க்கப் போராட்டத்தை துரிதமாக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், மற்றும் COVID-19 பரவுவதைத் தடுக்க வாரங்களாக எதுவும் செய்யாத நிலையில் மற்றும் அரசாங்கங்கள் அவசரமாக அறிவித்த முடக்கங்களை விதித்தபோது அங்கே, சமூக எதிர்ப்பு குறைந்து வருவதாகத் தெரிந்தது. எவ்வாறாயினும், ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் பொலிஸ் கொலைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவில் வெடித்த வெகுஜன பல இன மற்றும் பல சிறு இனக் குழுக்களின் ஆர்ப்பாட்டங்கள், பின்னர் உலகம் முழுவதும் பரவியது, 2018 இல் மற்றும் 2019 இல் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அலை பூகோள தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன மற்றும் தொடக்க புரட்சிகர எதிர்ப்பின் ஆரம்ப கட்டங்களே என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தொற்றுநோய்க்கு முதலாளித்துவ உயரடுக்கின் பதில், குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நாடுகளில் - அதன் குற்றவியல் அலட்சியம், பொது சொத்துக்கள் பரந்தளவில் சூறையாடலாக இருந்தது. இப்போது COVID-19 தொடர்ந்து பரவி வரும் நிலையில் கூட தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தும் பிரச்சாரம் ஒரு சமூக பேரழிவை உருவாக்கியது. ஒரு மோசமான முதலாளித்துவ ஒழுங்கின் மிருகத்தனம், அரசியல்-கருத்தியல் திவால்நிலை மற்றும் ஒழுக்கக்கேடு ஆகியவற்றை அவர்கள் அப்பட்டமாகக் காட்டியுள்ளனர்.
இந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், சிக்கலான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் சூழப்பட்டு, பெருகிவரும் சமூக எதிர்ப்பை எதிர்கொள்வது, இராணுவ மோதலில் ஒரு வழியைக் காண்பார்கள், ஒரு உண்மையான மற்றும் வளர்ந்து வரும் ஆபத்து உள்ளது - இது வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கும் "தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும்", ”வெறித்தனமான பேரினவாத தேசபக்தி மற்றும் அரசு அடக்குமுறை ஆகியவற்றின் மூலம், “போர் அவசியம்” என்று நியாயப்படுத்தப்பட்டது.
இந்தியா ஒரு விஷயமாகும். தொற்றுநோய்க்கு இந்திய உயரடுக்கின் ஆபத்தான பதில்-தவறாக தயாரிக்கப்பட்ட முடக்கம்; வெகுஜன சோதனை போன்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுப்பது; இப்போது "பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது" - இதன் விளைவாக 120 மில்லியன் வேலையின்மை மற்றும் COVID-19 நோய்த்தொற்றுகளின் வளர்ச்சி விகிதம் உலகின் மிக உயர்ந்த ஒன்றாகும். நேற்று, இந்தியாவின் ஊடகங்கள் இறந்த 20 இந்திய இராணுவத்தினரை புகழ்ந்து பேசும் போது, COVID-19 இறப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 2,003 அல்லது 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.
ஒரு மதிப்பிழந்த மற்றும் உடந்தையான எதிர்ப்பைப் பயன்படுத்தி, மோடியும் அவரது பாஜகவும் சமூக எதிர்ப்பைத் திசைதிருப்பவும், எதிர்வினைகளை ஏற்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பாகிஸ்தானின் மீது வெறித்தனமான வகுப்புவாதம், போர்க்குணமிக்க தேசியவாதம் மற்றும் பொறுப்பற்ற “ஊடுருவி தாக்குதல்” ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் யுத்தத்தால் "சோதிக்கப்படுகின்றன" என்ற அச்சுறுத்தல் அமெரிக்காவை விட எங்கும் தெளிவாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று ஒரு பாசிச சிந்தனை கொண்ட தன்னலக்குழுவும் வளர்ந்து வரும் சர்வாதிகாரியுமான ட்ரம்ப்பால் வழிநடத்தப்படுகிறது. அதன் அரசியல் உயரடுக்கு அவர்கள் மட்டத்திலேயே போரில் ஈடுபட்டுள்ளது, அதன் பிரமாண்டமான இராணுவம் அதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஒரே எஞ்சிய சக்தியாக உள்ளது. கடைசியாக, மிக முக்கியமானது அது, பெருகிய முறையில் போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது.
பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரம் மற்றும் வர்க்கப் போராட்டம், போருக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் அதிக அவசரத்தை அளிக்கிறது. போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஆனால் பெருகிய முறையில் பூகோள தன்மை கொண்டதாக அதன் போராட்டங்கள் மாறுகையில் அதற்கு தேவைப்படுவது ஒரு நனவுபூர்வமான மூலோபாயமும் அதனை தொழிலாளர் ஆட்சி மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதாகும். இந்த விளக்கத்துடன் தொழிலாள வர்க்கத்தை பலப்படுத்துவதற்கான போராட்டத்தில் நம்முடன் இணையுமாறு அனைத்து WSWS வாசகர்களையும் நாம் ஊக்குவிக்குறோம்.