ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டநிலையில், கொரோனா வைரஸ் பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் முற்றுப்புள்ளி வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் இறுதியில் மக்ரோன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது, பகுதியான கொரோனா வைரஸ் பொது முடக்கம் நேற்று முடிவுக்கு வந்தது. பயணக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருதல் என்பது, விடுமுறைக்கு முன் மக்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக செல்ல முடியும். ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் அதிகமான புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தழுவிய அளவில் இரவு 8:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை ஊரடங்கு உத்தரவு விடுமுறை காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஒன்றுகூடல்கள் தொடர்ந்து நடைபெறும் என்றாலும், இரவு 8:00 மணிக்குப் பிறகு பணிக்கு செல்வதைத் தவிர, மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் கடந்த வியாழக்கிழமை வரையறுக்கப்பட்ட பொது முடக்க முடிவை அறிவித்தார். எந்தவொரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு அவசியமாக இருக்கும் என்று அறிவித்த 5,000 க்கும் குறைவான தினசரி கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களின் அரசாங்கத்தின் மிக உயர்ந்த வரம்பு கூட பூர்த்தி செய்யப்படுவதற்கு அருகில் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட போதிலும் அவர் அவ்வாறு செய்தார்.

A புதன்கிழமை, ஆக்டோபர் 28ந் திகதி 2020, தெற்கு பிரான்சின் ஆர்ல் உள்ள ஜோசப் இம்பர்ட் மருத்துவமனை மையத்திலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஒரு கோவிட்-19 நோயாளி தனது குடும்பத்தினருடன் பேசும் போது ஒரு செவிலியர் தொலைபேசியை பிடித்து உதவுகிறார் (AP Photo/Daniel Cole)holds a phone while a COVID-19 patient speaks with his family from the intensive care unit at the Joseph Imbert Hospital Center in Arles, southern France, Wednesday, Oct. 28, 2020. (AP Photo/Daniel Cole)

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை, பிரான்சில் மேலும் 371 பேரும், ஜேர்மனியில் 481, இத்தாலியில் 491, ரஷ்யாவில் 450, மற்றும் பிரித்தானியாவில் 232 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பா முழுவதும், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 20 மில்லியனைத் தாண்டியது.

பிரான்சில், அக்டோபர் மாத இறுதியில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொது முடக்கமானது பெரும்பாலான பணியிடங்கள் அல்லது பள்ளிகளை உள்ளடக்கியது அல்ல, வைரஸின் பரவலைக் குறைத்தது, ஆனால் அதன் தாக்கம் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே உயர்ந்தது மற்றும் இப்போது தலைகீழாகத் தொடங்குகிறது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

ஒரு நாளைக்கான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகாவில்லை. ஞாயிறு தவிர, சோதனை மையங்கள் மூடப்படுவதால் எண்ணிக்கையளவு குறைக்கப்படுகிறது, தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாக இருக்கவில்லை, மேலும் பெரும்பாலும் 15,000 க்கு நெருக்கமாக உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூடுதலாக 242 பேர்கள் மருத்துவமனைகளிலும், நேற்று 35 பேர்கள் புதிய அனுமதியாக அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர்.

விடுமுறைக் காலத்திற்கான மில்லியன் கணக்கான மக்களின் பயணம் பெருந்தொற்று நோய் பரவுவதில் மேலும் ஒரு துரிதப்படுத்தலை உறுதி செய்யும். இது முற்றிலும் போதாத பரிசோதனை முறையினால் அதிகரிக்கப்படுகிறது. கடந்த வாரம், மக்ரோன் அரசாங்கம், தங்கள் குடும்பங்களைப் பார்வையிடச் செல்லும் முன் கூட, நோய் அறிகுறியற்ற எவரும் பரிசோதிக்கப்படக்கூடாது என்று ஆலோசனை கூறியது, ஏனெனில் இது நாட்டின் பரிசோதனை திறன்களை மூழ்கடித்துவிடும் என்பதற்காகும். இந்த வைரசை சுமந்து செல்லும் பல இளைஞர்கள் அறிகுறியற்று இருக்க வாய்ப்பு இருப்பதால், இது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மேலும் தொற்று ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.

நேற்று, காஸ்டெக்ஸ் ஐரோப்பா 1 வானொலிக்கு ஒரு நேர்காணலைக் கொடுத்தார், அதில் விடுமுறை காலத்திற்கு முன்னர், பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தரும் எவரும் முடிந்தால் ஒரு வாரத்திற்கு முன்பே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை அவர் விளக்கவில்லை, அரசாங்கம் மாணவர்களுக்கு கட்டாய பள்ளி வருகையை பராமரித்து வருவதாகவும், பணியிடங்களை திறந்து வைத்திருப்பதாகவும் உள்ளது.

“உங்களால் அதைச் செய்ய முடிந்தால்… கிறிஸ்துமஸுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் [இது சாத்தியமில்லை [அனைவருக்கும்]. சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் பாதிக்கப்படக்கூடிய ஒருவரைப் பெறுகிறீர்கள் என்றால்…”

முடிந்தால், வரவிருக்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஊக்குவிக்கப்பட்டனர். இது மக்ரோன் அரசாங்கத்தின் முழுக் கொள்கையின் குற்றவியல் மற்றும் வர்க்க அவமதிப்பை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கான உத்தியோகபூர்வ பொய்யை நியாயப்படுத்துவது என்னவென்றால், பெரியவர்களை விட குழந்தைகள் வைரஸைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாகும். வைரஸ் குறித்த பல விஞ்ஞானரீதியான ஆய்வுகள் ஏற்கனவே இதை மறுத்துள்ளன. பெற்றோர்கள் “யாருக்கு இயலுமோ” என்ற பரிந்துரை பணியில் இருக்க நிர்பந்திக்கப்படாதவர்களுக்கும் வெறுமனே பொருந்தும்.

விடுமுறை காலத்தைத் தொடர்ந்து, ஜனவரி 4 ஆம் திகதி பள்ளிகள் இயல்பாக மீண்டும் திறக்கப்பட உள்ளன, தற்போது ஜனவரி பிற்பகுதியில் உணவகங்கள் மற்றும் பார்களைக் கூட மீண்டும் திறக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

இந்த தொற்றுக்கு மக்ரோன் அரசாங்கத்தின் விடையிறுப்பு வைரஸிற்கு எதிராக மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான விஞ்ஞானத் தேவையால் தீர்மானிக்கப்படவில்லை. அது முக்கியமாக பிரெஞ்சு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களையும் அதனுடைய பெரும் செல்வந்தர்களின் செல்வவளத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினால் நிபந்தனைக்குட்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் எட்டு வார பொது முடக்கம் போலல்லாமல், அக்டோபரில் பொது முடக்கம் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவில்லை. பள்ளிகளைத் திறந்து வைப்பது, அவைகள் வைரஸ்களை பரப்பும் காவிகளாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பெற்றோர்களை பணியில் வைத்திருப்பதோடு, பொருளாதார மூடல் இலாபத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தக் கொள்கைகளின் நேரடி விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில்லாமல் மடிந்துள்ளனர்.

இதே கொள்கையை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுமுள்ள அரசாங்கங்கள் பின்பற்றியுள்ளன. பிரிட்டனில், ஜோன்சன் அரசாங்கம் டிசம்பர் 3 ஆம் திகதி இதேபோன்ற வரையறுக்கப்பட்ட தேசிய பொது முடக்கங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது, மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அனைத்து கடைகளையும் 24 மணி நேரமும் திறக்க அனுமதித்தது. இந்த வைரஸுக்கு பதிலளிப்பதற்கான ஒரு மாதிரியாக சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டுள்ள ஜெர்மனியில், இப்போது ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன, மேலும் அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் அல்லது பள்ளிகளையும் மூட அரசாங்கம் மறுத்துவிட்டது.

தடுப்பூசிகள் விநியோகிக்கப்படத் தொடங்கி விட்டநிலையில், இன்னும் சில மாதங்களில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றமுடியும் என்ற நிலையில், இந்தக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையானது இந்தக் கொள்கையின் குற்றத்தன்மையைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பா முழுவதும் பங்குச் சந்தைகளின் பரிணாம வளர்ச்சியில் அதற்குக் கீழான வர்க்க நலன்களைக் காணலாம். பிரான்சில், முக்கிய CAC-40 பங்குச் சந்தைக் குறியீடு பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து மார்ச் மாத தொடக்கத்தில் கடுமையாக சரிந்தது, ஏனெனில் வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது. ஜனாதிபதி மக்ரோனின் மார்ச் 12 ஒரு பொது முடக்க அறிவிப்புக்குப் பிறகு, செல்வந்தர்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களுக்கு பிணை எடுப்பதற்கான உறுதிமொழி உறுதிப்படுத்தப்பட்டதுடன் CAC-40 தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாத இறுதியில் இருந்து மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட உச்சத்தை அடைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பின்வரும் கோரிக்கைகளை முதலாளித்துவ உயரடுக்கின் படுகொலைக் கொள்கையை எதிர்ப்பதற்கான ஒரே வழிமுறையாக முன்வைத்துள்ளது:

பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களிலுள்ள அனைத்து உற்பத்தியையும் உடனடியாக நிறுத்துல்

பணிக்குத் திரும்பும் வரை ஏற்புடையதான வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் மாத வருமான ஒதுக்கீடு வழங்குதல்

சிறு வணிகங்களுக்கு தொழில் நிறுவனங்களின் பொருளாதார நிலைத்தன்மையையும் அதன் ஊழியர்களின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை அவர்களின் ஊதியங்கள் மற்றும் சம்பளத்தையும் பராமரிக்க போதுமான அளவு நிவாரண ஒதுக்கீடு வழங்குதல்

தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்கும், இலவசமாக கொடுக்கவும், பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் உள்ளிட்ட பொது சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கீடு செய்தல்

அத்தகைய கொள்கைக்கான போராட்டத்திற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலும், மேலும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டமும் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைத்தலும் தேவையாகும்.

Loading