கோவிட் தடுப்பூசி விநியோகம்: முதலாளித்துவ திறமையின்மைக்கான ஒரு நிரூபணம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பரபரப்பான கோவிட் தடுப்பூசி விநியோகம், பேரழிவுகர ஒழுங்கமைக்கப்படாத விளம்பர பகட்டுவித்தைக்கு மேலாக இருக்கவில்லை.

துணை ஜனாதிபதி பென்ஸும் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் கடந்த வார இறுதியில் தங்களுக்கான Pfizer COVID mRNA தடுப்பூசியை போட்டுக் கொண்டனர், உயர் அதிகாரிகளுக்கும் அதே நடைமுறையை பின்பற்றி “தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்களை” உறுதிசெய்து கொள்ளும் ஒரு நிகழ்வாக இது இருந்தது, அதாவது பல மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கப்பலில் வரும் இரண்டாவது சரக்கு மருந்துகள் குறைந்தளவே தங்களுக்கு கிடைக்கும் என்பதை அறிந்திருந்தனர். ஆரம்பகட்டமாக, இந்த வாரத்தில் சுமார் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன, என்றாலும் இந்த வாரத்திற்கு பின்னர் 2 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே வரப்போகிறது என்று மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி விநியோகம் ஆரம்பித்து முதல் வாரத்தில் முதல்கட்ட ஒதுக்கீடாக 49,725 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர், விஸ்கான்சின் மாநில சுகாதார அதிகாரிகளுக்கு வரும் வாரங்களில் 35,100 தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. “இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ள அளவிலான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள விஸ்கான்சின் குடிமக்களுக்கு உரிமையுள்ளது” என்று ஆளுநர் டோனி எவெர்ஸ் புகார் கூறினார்.

டிசம்பர் 18, 2020, வெள்ளிக்கிழமை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள ஐசனோவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் வைத்து துணை ஜனாதிபதி மைக் பென்ஸூக்கு Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசி போடப்படுகிறது (AP Photo/Andrew Harnik)

மில்வாக்கி மாகாணத்தின் அவசரகாலநிலை நிர்வாக அலுவலகத்தின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் பென் வெஸ்டன், “நிச்சயமாக, எங்களுக்கு இன்னும் அதிகளவு தடுப்பூசிகள் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் தடுப்பூசி போடப்பட வேண்டிய ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் இங்கு உள்ளனர். அதிலும், நோயாளிகளுக்கான நீண்டகால பராமரிப்பு வசதிகளில் வாழ்வது அல்லது பணிபுரிவது போன்ற அதிக ஆபத்தில் உள்ள நிறைய வகையினர் இங்கு உள்ளனர். மேலும், கட்டுப்பாடற்ற சூழலில் நோயாளிகளை கையாளுவதற்கு முன்நின்று போராடும் EMS வழங்குநர்கள் ஏராளமானோரும் இங்கு உள்ளனர்” என்று Milwaukee Journal Sentinel நாளிதழுக்கு தெரிவித்தார். விஸ்கான்சின் மாநிலம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எழுச்சி பெற்ற நோய்தொற்று அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகள் அவற்றின் உச்சபட்ச திறனை தாண்டி இயங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டன.

ஒரேகான், புளோரிடா மற்றும் மிச்சிகன் மாநிலங்களின் அரசாங்கங்கள் ஒதுக்கீட்டின் படி அல்லாமல் தடுப்பூசிகளின் அளவைக் குறைப்பதை கண்டித்து பகிரங்கமாக அறிக்கைகள் வெளியிட்டன. இந்த பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பல மாநிலங்கள் தங்களது தடுப்பூசி வழங்கல் திட்டங்களை மறுஒழுங்கு செய்ய முனைந்துள்ளன.

வாஷிங்டனின் ஒரு மூத்த அதிகாரியின் கருத்துப்படி, புத்தாண்டு தினத்திற்குள் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற அதன் இலக்கை அமெரிக்கா எட்டாது. அரசாங்கத்தின் தடுப்பூசி விநியோக திட்டத்திற்கான பொறுப்பு அலுவலரான இராணுவ அதிகாரி, ஜெனரல் குஸ்டாவ் பேர்னா கூறியபடி, முன்கணிக்கப்பட்டதை விட ஒரு வாரம் கழித்தே 40 மில்லியன் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும் என்று திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது.

மேலும் சனியன்று, “தடுப்பூசி விநியோகிக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பற்றி துல்லியமாக நான் புரிந்துகொள்ளவில்லை. அதில் நான் தோல்வியுற்றேன், நான் சரிசெய்து கொள்கிறேன், மேலும் நாம் அதிலிருந்து முன்னேறிச் செல்வோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “அதாவது தடுப்பூசிகள் எந்தளவிற்கு கிடைக்கும் மற்றும் எந்தளவிற்கு விநியோகிக்கலாம் என்பதற்கிடையில் தான் தாமதம் ஏற்படுகிறது, ஏனென்றால் எங்களுக்கு கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளின் சரியான எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதா மற்றும் ஆயிரக்கணக்கானதா மற்றும் மில்லியன் கணக்கானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றவர் கூறினார். இந்நிலையில், நோய்தொற்று பரவலின் ஏழுநாள் சராசரி போக்காக நாளாந்தம் 2,583 இறப்புக்கள் நிகழும் பட்சத்தில், ஒரு வாரம் தாமதமானால் கூட மேலும் 18,000 பேர் இந்த நோய்தொற்றுக்கு பலியாக நேரிடும்.

நியூ யோர்க் டைம்ஸ் கணக்கெடுப்பின் படி, டிசம்பர் 18, மற்றும் SARS-CoV-2 வைரஸூக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேசியளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு குறைந்தது ஒரு வார காலத்திற்குள், Pfizer நிறுவன தடுப்பூசியின் முதல்கட்ட விநியோகத்தில் தோராயமாக 130,000 மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்டதே, என்றாலும் தடுப்பூசிகளை வழங்குவதற்கு மில்லியன் கணக்கான மக்களை ஆயிரக்கணக்கான தடுப்பூசி விநியோக இடங்களுக்கு கொண்டு வருவதற்கான தளவாட வசதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுடன், அடுத்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது கட்ட விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நிரூபணமாகிறது.

அதே நாளில், Moderna நிறுவனம் உருவாக்கிய கொரோனா வைரஸூக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசிக்கு FDA அவசர ஒப்புதலை வழங்கியுள்ளது. Pfizer ஐ போல, Moderna வும் mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுடன், சில வாரங்கள் இடைவெளியில் இதுவும் இரண்டு கட்ட தடுப்பூசி விநியோக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. என்றாலும், Moderna தடுப்பூசிக்கு அதையொத்த தீவிர குளிர் வெப்பநிலையில் பராமரிக்கும் தேவைகள் இல்லை.

Pfizer நிறுவனம், தங்களது தடுப்பூசி உற்பத்தியில் நிலவும் விநியோகச் சங்கிலி சிக்கல்களின் ஒரு பகுதியாக, ஆரம்பகட்ட தடுப்பூசி விநியோக அளவை 100 மில்லியன்களிலிருந்து 50 மில்லியன்களாக குறைக்க நேரிட்டது, மேலும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு 1.3 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்க நம்பிக்கையுடன் உறுதியளித்து, அவர்களது சிகிச்சை முறைகளுக்கு தயார் செய்வதில் அதற்கு சிரமங்கள் இருப்பதாக கூறும் எந்தவொரு கூற்றுக்கும் மாறாக செயலாற்றியது. Operation Warp Speed திட்டத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகரான மோன்செஃப் ஸ்லாவி, 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இரண்டாவது 100 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளவே மத்திய அரசாங்கம் முனைந்தது என்பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். கடந்த ஜூலையில் கையெழுத்திடப்பட்ட 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கான 1.95 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒப்பந்தம் மேலும் 500 மில்லியன் தடுப்பூசிகள் வரை அமெரிக்கா வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இன்று, CNBC இன் “Squawk Box” நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா உடனான ஒரு நேர்காணலின் போது, நிகழ்ச்சி வழங்குநர் மெக் டிரெல் என்பவரின் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இந்த பகிரங்கப்படுத்தப்பட்ட உத்தரவாதங்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. Operation Warp Speed திட்டம், மூலப்பொருட்களைப் பெறுவதற்கான பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (Defense Production Act) பயன்படுத்தி, Pfizer நிறுவனம் அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க அதற்கு உதவுவதற்கு முன்வந்தது பற்றி கூறி அவர் தனது கேள்வியை தொடங்கினார். அதாவது, “பாதுகாப்பு உற்பத்திச் சட்டம் உங்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்குமானால், அது Pfizer நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கும்?” என்று கேட்டார்.

போர்லா அதற்கு, “இது மிகுந்த சாத்தியமுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், மேலும் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை முடிந்தளவிற்கு அதிகரிக்க இது எங்களை அனுமதிக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தற்போது அவர்களிடம் கேட்கிறோம்… அவர்கள் அதை விரைவில் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், குறிப்பாக (தடுப்பூசியின்) சில கூறுகளில், நாங்கள் முக்கியமான விநியோக வரம்புகளை கொண்டு இயங்குகிறோம் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது). என்றாலும், அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன், அதனால் எந்த பிரச்சினையும் இருக்காது” என்று பதிலிறுத்தார்.

டிசம்பர் 3 அன்று, Pfizer நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “மூலப்பொருட்கள் விநியோகச் சங்கிலியை அளவிடுவது எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்தார். இந்த பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மூலமாக தயாரிக்கப்படுகின்றன என்பதுடன், தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட தரக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் பெறப்பட்ட தொகுப்புகளில் சில பயன்படுத்த முடியாதவை என்று Pfizer நிறுவனம் கூறியுள்ளது, இது திருத்தப்பட்ட குறைந்த மதிப்பீடுகளுக்கு வழிவகுத்தது. இந்த குறைபாடுகள் எங்கு நிகழ்ந்தன என்பதை இராட்சத மருந்து நிறுவனங்கள் தெளிவுபடுத்தவில்லை, என்றாலும் அவை பல மருத்துவ வகை பொருட்களை உள்ளடக்கியிருந்தன.

Pfizer நிறுவனத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அசல் ஒப்பந்தத்தின் படி, நவம்பரில் தொடங்கி ஒரு மாதத்திற்குள் 20 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். என்றாலும், Pfizer நிறுவனம், இந்த ஒதுக்கீட்டை 2021 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் வழங்கும் வகையில் பிரித்துக் கொண்டது. Bloomberg இன் கருத்துப்படி, “Pfizer இதுவரை சுமார் 10.4 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்காவிற்கு ஒதுக்கியுள்ளதாக (மூத்த நிர்வாக) அதிகாரி தெரிவித்தார். முதல் தவணையான 6.4 மில்லியன் தடுப்பூசிகளில், 500,000 தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டன, மேலும் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் இந்த வாரம் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. எஞ்சிய 2.9 மில்லியன் தடுப்பூசிகள் தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் இரண்டாவது கட்ட நியமத்தின் படி, மூன்று வாரங்களில் அனுப்பிவைக்கப்படும். அடுத்த வாரம், இரண்டாவது கட்ட ஒதுக்கீடான 4 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கத் தொடங்கும் என்பதுடன், இரண்டாவது பாதியில் பாதியளவை நிறுத்தி வைத்து மீண்டும் பாதியளவு தடுப்பூசியை அனுப்பும்.”

இந்த செயல்முறைகள் குறித்து பொது ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அரசாங்கத்திற்கு புதிய வாராந்திர ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவற்றை எங்கு அனுப்ப வேண்டும் என்பதை மாநிலங்கள் தீர்மானித்தவுடன் மத்திய அரசாங்கம் அவற்றை மாநிலங்களுக்கு அனுப்பும்.

The Atlantic பத்திரிகையின் விஞ்ஞானப் பிரிவு எழுத்தாளரான எட் யோங், “இது மிக மெதுவான செயல்முறையாக இருக்கும், அதாவது தடுப்பூசியை உற்பத்தி செய்வது, விநியோகிப்பது, மற்றும் ஒதுக்கீடு செய்வது போன்றவற்றில் ஏராளமான தடைகளுக்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. அதாவது மக்களின் கைகளில் தடுப்பூசி கிடைக்க ஆரம்பித்தவுடன், இயல்புநிலை திரும்பும் என்ற வகையில், தடுப்பூசியை ஒரு மின்விளக்கு துவக்கி (light switch) போன்று நினைக்க வேண்டாம். நோய்தொற்று விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர சற்று காலம் பிடிக்கும்” என்று NPR க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் தேசிய தடுப்பூசி உள்கட்டமைப்பு எதுவும் இல்லை, அதிலும் தடுப்பூசி விநியோகத்திற்கான மிக அற்பமான நிதி ஒதுக்கீடுகள் முற்றிலும் போதுமானவை அல்ல. இது குறிப்பிட்ட படி, மாநில சுகாதாரத் துறைகள் தங்கள் தடுப்பூசி பிரச்சாரங்களுக்கு நிதியளிக்க தேவையான பில்லியன் கணக்கான வளங்களை பாதுகாக்க அண்ணளவாக 1 டிர்லியன் டாலர் நிதி தொகுப்பு உதவும் என்று சட்டமியற்றுபவர்கள் காங்கிரஸில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தனர்.

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் H1N1 தடுப்பூசி திட்டங்களின் படிப்பினைகளின் அடிப்படையில், கோவிட்-19 க்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்க மாநிலங்கள் எந்தளவிற்கு தயாராகவுள்ளன? என்ற தலைப்பிலான காமன்வெல்த் நிதியத்தின் சமீபத்திய வெளியீட்டில், சுகாதார காப்பீடு வைத்துள்ளவர்கள், வழமையான பராமரிப்பு ஆதாரம் கொண்டவர்கள் மற்றும் கணிசமாக செலவு செய்ய முடிந்தவர்கள் ஆகியோருக்கு வருடாந்திரம் ஏற்படும் காய்ச்சல் பிரச்சினையை சமாளிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், கோவிட்-19 தடுப்பூசி விவகாரத்திற்கு முன்நிற்கும் சிரமங்களைச் சுட்டிக்காட்டி, அடிக்கடி சுகாதார சேவையை அணுக வேண்டியுள்ள மற்றும் அதிகபட்ச தேசிய தடுப்பூசி விகிதங்களைக் கொண்டுள்ள நாள்பட்ட சுகாதார நிலைமைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, தேசிய இலக்கான 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இன்னும் தடுப்பூசி போடப்படுகிறது.

வயது, வருமானம் மற்றும் கல்வி ஆகியவை தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. தடுப்பூசி விநியோகிப்பு விகிதத்தில் இன ஏற்றத்தாழ்வுகள் நீடித்திருந்தாலும், தடுப்பூசி அணுகல் என்பது காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் அனைத்து இனங்களைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினரிடையே உள்ள பொதுவான நிதித் தடைகளுடன் இணைந்ததாக உள்ளது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Moderna நிறுவனத்தின் தடுப்பூசி வருகை அமெரிக்காவில் அடுத்த வாரம் மேலும் 5.9 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு களம் அமைக்கிறது. Moderna நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் தடுப்பூசிகளையும், மேலும் 2021 முதல் காலாண்டில் 125 மில்லியன் வரையிலான தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது. இருந்தாலும், இந்த உயிரியல் மருந்து நிறுவனம் ஒருபோதும் ஒரு மருந்தையும் சந்தைக்குக் கொண்டு வரவில்லை என்பதுடன், அதற்கென சொந்தமான பரந்தளவிலான உற்பத்தி வசதிகளும் அதனிடம் இல்லை. எனவே, மே மாதம், behemoth Lonza AG என்ற சுவிட்சர்லாந்த் மருந்து உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும் ஆண்டுக்கு 1 பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அது மேற்கொண்டது.

அதாவது, அமெரிக்கா முழுவதிலுமுள்ள 21 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு கூட போதுமான தடுப்பூசிகள் கிடைப்பது உறுதியில்லை. மேலும், மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளின் அதிகப்படியான வருகையையும், ஊழியர்களின் பற்றாக்குறையையும் எதிர்கொள்ளும் நிலையில், மாநிலங்களில் தொற்றுநோய் பரவல் தொடர்ந்து தீவிரமாக உள்ளது, இது மாநில அளவிலான தடுப்பூசி விநியோகத்தில் தேவையற்ற சிக்கலை சேர்க்கிறது.

தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தை, அதிலும் குறிப்பாக வயோதிபர்களை, அல்லது நாள்பட்ட உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அளவுக்கதிகமாக பேரழிவிற்குட்படுத்தியுள்ளதானது, அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆபத்திற்குட்படுத்தியுள்ளது, அதேவேளை பணக்காரர்களோ தடுப்பூசியை பெறுவதற்கு தங்களது மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுடனான திரைமறைவு ஒப்பந்தங்களுக்கு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய அநேகமாக ஒட்டுமொத்த தடுப்பூசி வருகைகளையும் பணக்கார நாடுகளும் கூட கைப்பற்றியுள்ளதால், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த உயிர் காக்கும் சிகிச்சை முறைகளை அணுகமுடியாமல் உலகின் பெரும்பாலான பகுதிகள் கைவிடப்படுகின்றன.

Loading