மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
SARS-CoV-2 வைரஸின் பல்வேறு திரிபு வகைகள் தொடர்ந்து பரவி வரும் நிலையில், குறிப்பாக ஐக்கிய இராஜ்யம், பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவில் தோன்றிய கொரோனா வைரஸின் தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
பெப்ருவரி 20க்குப் பின்னர், உலகம் முழுவதும் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, அப்பொழுது 361,000 நோயாளிகளில் இருந்து, இப்போது 422,000 க்கும் அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கையானது 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 22,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் உள்ளன (80 சதவீதம் அதிகரிப்பு), பிரான்சில் 25,000 க்கும் சற்று குறைவாகவும் (24 சதவிகிதம் அதிகரிப்பு), மற்றும் இத்தாலியில் 22,000 (83 சதவிகிதம் அதிகரிப்பு) உள்ளன. புதிய அலையின் முக்கிய இயக்கியாக பிரேசில் இருக்கிறது, அங்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 66,000 புதிய தொற்றுக்கள் உள்ளன (ஒரு 36 சதவீதம் அதிகரிப்பு) மற்றும் உயர்ந்துகொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் தற்போது 120 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. 2,660,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
சிலி, செக் குடியரசு, எத்தியோப்பியா, ஜேர்மனி, ஈரான், பராகுவே, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் அவற்றின் தொற்று எண்ணிக்கைகளில் நிலையான, மற்றும் சில சந்தர்ப்பங்களில் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளன. அமெரிக்காவில், தொற்றுக்களின் வீழ்ச்சி பெரும்பாலும் தேக்கநிலையாக உள்ளது, ஒவ்வொரு நாளும் 55,000 புதிய பதிவாகும் தொற்றுக்கள் இன்னும் சராசரியாக உள்ளது.
இந்தப் புதிய அலை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டால், இன்னும் மோசமானதாக இருக்கும் என்பதற்கான எல்லா அறிகுறிகளும் உள்ளன. முந்தைய அலை ஒப்புமையில் மட்டுப்படுத்தப்பட்ட பள்ளி மற்றும் பணியிட மறுதிறப்புகளால் உந்தப்பட்டது, அக்டோபர் தொடக்கத்தில் 300,000 க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை ஜனவரி தொடக்கத்தில் 745,000 ஆக இருந்தது. உலகளவில், அந்த மூன்று மாத காலத்தில் 900,000 க்கும் அதிகமான மக்கள் இறந்துள்னர்.
இத்தகைய நிலைமையால் ஏற்படும் சமூகத் துயரம் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 2020ல் பெருந்தொற்று நோய்களால் ஆபிரிக்காவில் 30 மில்லியன் மக்கள் மிகவும் வறுமையில் மூழ்கியுள்ளனர் என்றும், ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவாக வாழ்ந்து கொண்டுள்ளனர் என்றும், 2021ல் 39 மில்லியன் மக்கள் சமமான அளவில் ஆதரவற்றவர்களாக ஆக்கப்படுவார்கள் என்றும் ப்ளூம்பேர்க் சமீபத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 2020ல் லத்தீன் அமெரிக்காவில் வறுமைக்கு 22 மில்லியன் மக்கள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கில் "புதிய ஏழைகளின்" எண்ணிக்கை குறைந்தது 38 மில்லியன் அதிகரித்துள்ளது.
உலக வங்கியானது உலக அளவில் இதுவரை 119 முதல் 124 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.
"இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உலகம் வெகுஜன அதிர்ச்சி வடுக்களை அனுபவித்துள்ளது, ஏனென்றால் இரண்டாம் உலகப் போரானது பல, பல மில்லியன் உயிர்களைப் பாதித்தது. இப்போது, இந்த COVID பெருந்தொற்று, மாபெரும் அளவில், அதிக உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது," என்று WHO டைரக்டர் ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus வெள்ளியன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார். "கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது, உலகின் மேற்பரப்பில் ஒவ்வொரு தனி நபரும் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர்."
இப்போது, தொற்று எண்ணிக்கைகள் கடந்த எழுச்சியின் தொடக்கத்தில் இருந்ததை விட அதிகமாக இருப்பதால், பைடன் நிர்வாகம் இன்னும் முழுமையான முறையில் பள்ளி மற்றும் வேலைக்கு திரும்புவதற்கு தலைமை தாங்கி வருகிறது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் பிற கண்டங்களிலுள்ள நாடுகள் இதைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன, இது பெருந்தொற்று நோயை இன்னும் அதிக அளவில் விரிவாக்கத் தூண்டுகின்றன. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கும் மறுதிறப்புகள், பாரியளவிலான மரணத்திற்கான இன்னும் பெரிய அதிகரிப்பிற்கு களங்களை அமைக்கிறது.
அமெரிக்க மற்றும் உலக மக்களுக்கு கட்டாயமாக வழங்கப்படும் சாக்குப்போக்கு என்னவென்றால், இது பாதுகாப்பானது, ஏனெனில் தடுப்பூசி போடுதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதாகும்.
உண்மை முற்றிலும் எதிர்மாறானது. மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவில் கூட, மக்களில் சுமார் 10 சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இதன் பொருள் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் கொடிய வைரஸிற்கு பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூற்றுப்படி, இந்த "தடுப்பூசி தேசியவாதம் மற்றும் தடுப்பூசி பதுக்கலுக்கான பல எடுத்துக்காட்டுகளால்" தடுப்பூசி போடுதல் துவக்கமே குணாசியப்படுத்தப்படுகிறது. பைடென் நிர்வாகம் தடுப்பூசியின் பதுக்கல் அளவை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது, இதில் சுமார் 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசி உள்ளது, இதற்காக FDA இன்னும் அவசர அங்கீகாரத்தை வழங்கவில்லை. அஸ்ட்ராசெனெகாவே அந்த அளவுகளை ஐரோப்பாவிற்கு மாற்றும்படியும் அங்கு அதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டது. அந்த யோசனை கையைமீறி நிராகரிக்கப்பட்டது, பைடெனின் COVID-19 பதில் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியட்ஸ் வெள்ளியன்று அறிவித்தார், "அமெரிக்கர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தடுப்பூசியை பெற்று போடுவதற்கு கவனம் செலுத்துகிறோம்."
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் (Operation Warp Speed) “அமெரிக்கா முதல்” கொள்கையை பைடென் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி தேசியவாதம் ஐரோப்பாவிலும் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் 250,000 டோஸ்களை ஏற்றுமதி செய்வதை இத்தாலி தடுத்தது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷேல், லண்டன் COVID-19 தடுப்பூசிகள் மீது ஏற்றுமதி தடை விதிப்பதாக குற்றம் சாட்டிய நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே பதட்டங்கள் தொடர்ந்தன.
இதன் விளைவாக, 350 மில்லியனுக்கும் அதிகமான அளவு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சர்வதேச அளவில் அளிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உட்பட, 10 நாடுகளில் மட்டுமே முக்கால் வாசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, தென் அமெரிக்காவில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை ஒரு டோஸ் அளவைத்தான் பெற்றுள்ளது. ஆபிரிக்காவில், இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 100,000 ஐ கடந்துவிட்டது, மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் பாதிக்கும் குறைவானவர்கள் தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
இந்த சீரற்ற விநியோகமே பெருந்தொற்று நோயை இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. டாக்டர் டெட்ரோஸ் சமீபத்தில் குறிப்பிட்டது போல, “தடுப்பூசிகளின் சமத்துவமற்ற விநியோகம் பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உலகளாவிய மீட்சிக்கும் வழிவகுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது,” ஏனெனில் “வைரஸ் நீண்ட காலமாக பரவுவதால், தடுப்பூசிகளைக் குறைவான செயல்திறன் கொண்டதாக திரிபுகள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பெருந்தொற்று நோய்க்கு நடுவில் மில்லியன் கணக்கான உயிர்காக்கும் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைப் பற்றி "சரியானது" எதுவும் இல்லை. பயன்படுத்தப்படாத ஒவ்வொரு டோஸும் ஒரு தொற்றுநோயை நிறுத்துவதற்கான ஒரு இழந்த வாய்ப்பாகும், மற்றொரு உயிர் காப்பாற்றப்படுகிறது. வைரஸை பிறழ்வு செய்வதற்கான அதிக வாய்ப்பாகும், தடுப்பூசிகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் ஒரு திரிபின் நோயெதிர்ப்புகளை அதிகரிக்கிறது, முழு பெருந்தொற்று நோயையும் மீள்தூண்டலுக்கு உள்ளாக்குகிறது. "இது உலகம் முழுவதும் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று டாக்டர் டெட்ரோஸ் இதை சரியாகக் கண்டித்தார்.
மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஒரு தொற்று நோய் நிபுணரான டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் இதே போன்ற கருத்துக்களை சமீபத்திய கட்டுரையில் வெளியிட்டார், "COVID-19 வகைகள் மற்றும் தடுப்பூசி அநீதியின் ஆபத்து." அதில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:
தேசிய அடிப்படையில் சிந்திப்பதன் மூலம் அமெரிக்காவோ அல்லது வேறு எந்த உலக சக்தியோ ஒரு தொற்றுநோயை தோற்கடிக்க முடியாது. COVID-19 தடுப்பூசிகள் இப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மைய அங்கமாகும். ஆனால் பாதுகாப்புத் துறையின் மற்ற துறைகளைப் போலல்லாமல், இது வெளிநாட்டினரைப் பாதுகாப்பதை உள்ளடக்கியது - சண்டையிடுவது அல்ல. கவிஞர் ஜான் டோன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டது போல, ‘எந்த மனிதனும் ஒரு தீவு அல்ல, தன்னையே முழுவதுமாகவும்; ஒவ்வொரு மனிதனும் கண்டத்தின் ஒரு பகுதி, முக்கிய பகுதியாகும். ’தற்போதைய உலகளாவிய பிளேக் காலத்தில் இருந்ததை விட இது ஒருபோதும் உண்மையாக இருந்ததில்லை. எண்ணிக்கை தொடர்ந்து எச்சரிக்கையொலி செய்தால், அது நம் அனைவருக்குமான எண்ணிக்கையாக இருக்கும்.
ஆனால் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டுள்ளபடி, ஆளும் வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கும் வேண்டுகோள்கள் செவிடன் காதுகளில் சங்கு ஊதுவதாகத்தான் இருக்கின்றன. ட்ரம்ப் அல்லது பைடென் நிர்வாகங்களோ அல்லது சர்வதேச அளவில் அவற்றின் சகாக்களோ தடுப்பூசியை பகிர்ந்து கொள்வதில் மிகவும் குறைவான ஆர்வம் கொண்டுள்ளனர். இருப்புக்குவியல்கள் புவிசார்அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய மூலோபாய சொத்துக்களாக பார்க்கப்படுகின்றன, உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மருந்துகள் அல்ல.
"முதலாளித்துவம் எதிர் சோசலிசம்: பெருந்தொற்று நோய் மற்றும் உலகளாவிய வர்க்கப் போராட்டம்" என்ற தனது கட்டுரையில் டேவிட் நோர்த் எழுதுகிறார்:
முதலாளித்துவ வேலைத்திட்டம் தடுப்பூசி தேசியவாத கொள்கையை ஊக்குவிக்கிறது, உலகெங்கிலும் தடுப்பூசிகள் சமமாக விநியோகிக்கப்படவேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது மற்றும் எதிர்க்கிறது. விஞ்ஞானரீதியாக வழிநடத்தப்படும் சர்வதேச மூலோபாயத்தின் மூலம் மட்டுமே கொரோனா வைரசை ஒழிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்ட சோசலிச வேலைத்திட்டம், பூகோளரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த பெருந்தொற்றுக்கு தேசியத் தீர்வு இல்லை. தேசிய அரசுகளின் இருப்புடன் பிணைந்துள்ள முதலாளித்துவ சமூக அமைப்புமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, உலகின் வளங்களை ஜனநாயக மற்றும் விஞ்ஞானரீதியான திட்டமிடலின் அடிப்படையில் மனித உயிர்கள் தனியார் இலாபத்திற்கு மேலாக வைக்கப்படுகின்ற ஒரு சோசலிச சமூகமாக மாற்றபட வேண்டும்.