நாற்கர உச்சிமாநாடு சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாராவதற்கு அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியை பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வெள்ளியன்று இணையவழியில் நடைபெற்ற நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது நாற்கரத்தின் முதலாவது தலைவர்களின் உச்சிமாநாடு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலை வியத்தகு முறையில் உயர்த்தியுள்ளது. நாற்கரம் இன்னும் ஒரு உத்தியோகபூர்வ இராணுவ கூட்டணியாக இல்லை என்றாலும், பைடென் நிர்வாகமானது சீனாவிற்கு எதிரான இராணுவ மோதலுக்கும், குறைமதிப்பிற்குட்படுத்துவதற்கும், சுற்றிவளைப்பதற்கும் மற்றும் இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்யவும் அதன் முயற்சிகளில் பங்காளித்துவத்தை ஒரு மைய கூறுபாடாக தெளிவாகப் பார்க்கிறது.

ஸ்காட் மோரிசன் (இடது) சிட்னி, மார்ச் 13, 2021 இல் ஒரு இணையவழி கூட்டத்தில் ஜோ பைடென், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடக்க நாற்கர தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்கிறார் [Credit: Dean Lewins/Pool via AP]

உச்சிமாநாடு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை மட்டும் வெளியிடவில்லை. வழக்கத்திற்கு மாறாக, பைடென் மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்கள் முறையே நரேந்திர மோடி, ஸ்காட் மாரிசன் மற்றும் யோஷிஹைட் சுகா ஆகியோர் வாஷிங்டன் போஸ்டின் முக்கிய பிரசுரமான ஒரு கருத்து கட்டுரைக்கு தங்கள் பெயர்களை வைத்தனர். இந்த கருத்துரையானது ஜனநாயகம், காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கை மற்றும் COVID-19 தடுப்பூசிகள் மீதான அவர்களின் வாதிடுதல் மற்றும் "சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான" உறுதிப்பாடு ஆகியவைகள் குறித்து சிடுமூஞ்சித்தனமான பிரதான அறிக்கைகளால் நிறைந்திருக்கின்றன.

ஆனால், சீனா குறித்து குறிப்பிடப்படாத நிலையிலும், உச்சிமாநாட்டில் அது ஆதிக்கம் செலுத்தியது. பிராந்திய ஒத்துழைப்பு, கூட்டுறவு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை தொடர நான்கு தலைவர்களின் உறுதிமொழிகள் நிச்சயமாக பெய்ஜிங்கிற்கு விரிவாக்கப்படவில்லை. பல்வேறு பொது அறிக்கைகளில் புதைக்கப்பட்டது, சீனாவை கட்டாயப்படுத்தல் குறித்த மெல்லிய-முகத்திரையிடப்பட்ட குறிப்புகளாக இருந்தன —அதாவது அமெரிக்கா வாடிக்கையாக போரை முன்னெடுத்தது மற்றும் அதன் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க அரசாங்கங்களை வெளியேற்றியுள்ளது— மற்றும் "கடல் பயண சுதந்திரத்தை" நிலைநிறுத்த வேண்டிய தேவையையும் — அதாவது, தென் சீனக் கடலில் சீன கட்டுப்பாட்டிலான கடல்களில் அமெரிக்க கடற்படை ஆத்திரமூட்டும் வகையில் ஊடுருவுவதற்கான தேவையுமாகும்.

வாஷிங்டன் போஸ்ட் இன் கருத்துரையானது ஆசியாவில் 2004 சுனாமிக்கு விடையிறுக்கும் வகையில் நான்கு நாடுகளின் ஒத்துழைப்புடன் இருந்து உருவானதாக கூறப்படும் நாற்கரம் குறித்த ஒரு கற்பனையான வரலாற்றை உள்ளடக்கியதாக உள்ளது. "நாற்கரம் என்று அழைக்கப்படும் எங்கள் ஒத்துழைப்பு, நெருக்கடியில் பிறந்தது. 2007 இல் இது ஒரு இராஜதந்திர உரையாடலாக மாறியது, 2017 இல் மறுபிறவி எடுத்தது," என்று தலைவர்கள் எழுதுகிறார்கள். அது எப்படி, ஏன் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் மர்மமாக மறைந்து, மீண்டும் தோன்றியது என்பது விளக்கப்படாமல் விடப்படுகிறது.

ஆயினும் நாற்கரத்தின் தோற்றம் மிகவும் வெளிப்படுத்துகிறது. இது சுனாமியுடன் தொடங்கவில்லை, ஆனால் 2006 ல் வலதுசாரி ஜப்பானிய அரசியல்வாதி ஷின்சோ அபே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நெருக்கமான கூட்டாண்மைகளை ஏற்படுத்தி அமெரிக்க-ஜப்பான் இராணுவ கூட்டணியை மேம்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஜப்பானை முந்திக்கொள்ளவிருந்த சீனா குறித்து ஜப்பானிய ஆளும் வர்க்கத்தில் அதிகரித்து வரும் கவலைகளால் இந்த திட்டம் இயக்கப்பட்டிருக்கிறது. சீனா மீதான செயலற்ற தன்மைக்காக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து குற்றச்சாட்டிற்குள்ளான புஷ் நிர்வாகமானது இந்த திட்டத்தை கைப்பற்றியது மற்றும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு மே 2007 இல் நடந்தது. அதன் இராணுவ நோக்கம் செப்டம்பர் 2007 இல் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் கடற்படைகளுடன் சேர்ந்து அமெரிக்க-இந்தியா மலபார் கடற்படை போர் பயிற்சி நடவடிக்கைகளின் விரிவாக்கத்தால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

சீனாவை குறிவைத்த இந்தோ-பசிபிக் பகுதியில் இராணுவக் கூட்டணி உருவாகி வருவதை எதிர்த்து பெய்ஜிங் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியுடனான உறவுகள் மற்றும் போரின் ஆபத்து குறித்து அக்கறை கொண்ட பிரதம மந்திரி கெவின் ரூட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற் கட்சி அரசாங்கம் பிப்ரவரி 2008 இல் சில மாதங்களுக்குப் பின்னர் சடுதியாக பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதும், நாற்கரம் இழிவான முறையில் சரிந்தது. சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சியுடன் நிற்கும்போது இந்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் சீன விரோதமாக கருதக்கூடிய ஒரு குழுவில் சேரக்கூடாது என்ற கான்பெர்ராவின் தீர்மானத்தை வெளியுறவு மந்திரி ஸ்டீவன் ஸ்மித் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் 2012 ல் அப்போதைய அமெரிக்க அரச செயலாளர் ஹிலாரி கிளின்டனுடன் (Wikipedia)

ரூட் நாற்கரத்திலிருந்து விலகுவது "குற்றங்களில்" ஒன்றாக கருதப்பட்டு, அதற்காக அவர் ஜூன் 2010 இல் அமெரிக்க-திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் வெளியேற்றப்பட்டார். அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டணிக்கு அவர் முழுமையாக உறுதியளித்திருந்தாலும், போரைத் தவிர்க்க சீனாவுடன் அமெரிக்கா சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று ரூட் வாதிடுவது, சீனாவை எதிர்கொள்ளும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையின் முக்கிய உந்துதலுடன் மோதலுக்கு வந்தது. ரூட் நான்கு முக்கிய தொழிற் கட்சி அதிகாரத் தரகர்களால் பிரதம மந்திரி பதவியிலிருந்து அகற்றப்பட்டார், பின்னர் விக்கிலீக்ஸானது கன்பெர்ராவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் "பாதுகாக்கப்பட்ட ஆதாரங்கள்" மூலம் இது வெளியுலகிற்கு வந்தது, இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, தொழிற் கட்சி அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் மறைப்பில் வைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது.

அடுத்துவந்த ஆண்டு, நவம்பர் 2011 இல், ரூட் பதவியில் இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை விஜயம் செய்த ஒபாமா, சீனாவுக்கு எதிரான தனது "ஆசியாவில் முன்னிலை" மூலோபாயத்தை அறிவித்தார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒபாமாவால் வெளியிடப்பட்ட “முன்னிலை” ஆனது பிராந்தியமெங்கும் சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தி சுற்றி வளைக்கும் விரிவான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. இராணுவ ரீதியாக, பென்டகனானது பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களை மறுசீரமைத்தல், கூட்டணிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் அதன் கடற்படை மற்றும் விமானத் தளபாடங்களில் 60 சதவீதத்தை ஆசியாவிற்கு மாற்றுவதை முன்னறிவித்தது. ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஒபாமாவும், பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டும் அமெரிக்க கடற்படையினரை நாட்டின் வடக்கில் நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பைடென், ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாகவும், செல்வாக்கு மிக்க செனட் வெளியுறவுக் குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்தார், இந்த சூழ்ச்சிகள் அனைத்திலும் நெருக்கமாக ஈடுபட்டார். கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சிமாநாட்டைக் கூட்டியதன் மூலம், அவர் நாற்கரத்தை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தினார், ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்களின் ஆக்கிரோஷமான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை தனது நிர்வாகம் தீவிரப்படுத்தும் என்பதை நிரூபித்தார். ட்ரம்பின் கீழ் புத்துயிர் பெற்ற நாற்கரமானது மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்க உள்ளது, வழக்கமான மந்திரி அளவிலான கூட்டங்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நேருக்கு நேர் உச்சிமாநாடு மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேலும் விரிவுபடுத்துதலாகும்.

நாற்கரம் குறித்து மூலோபாய விமர்சகர்கள் யாரும் சீனாவை இலக்கு வைத்திருக்கிறது அது என்று எந்த தவறான கருத்திற்கும் உட்பட்டிருக்கவில்லை. இது ஏற்கனவே ஒரு பகுதி-இராணுவ கூட்டணியானது ஆண்டு போர் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு வரம்பில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நீண்டகால இராணுவ நட்பு நாடுகளாகும், அதே நேரத்தில் இந்தியா விரிவான மூலோபாய பங்காளித்துவத்தின் மூலம் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது, இதில் விரிவான அடிப்படை ஏற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியும் அடங்கும்.

நாற்கர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் இரண்டு இராணுவ பகுப்பாய்வாளர்கள் வெளியுறவுக் கொள்கை என்ற பத்திரிகைக்காக "நாற்கரம் உரிமை பைடெனின் மிக முக்கியமான பணியாக இருக்கிறது" என்ற தலைப்பில் ஒரு கருத்துரையை எழுதினார்கள். "நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை சீனாவிற்கு எதிராக நிற்பதற்கான சிறந்த நம்பிக்கை" என்று அது கூறியது. COVID-19 பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்ததை விட அதிக நம்பிக்கையுடன் இருந்த, "ஒரு மீண்டெழுகின்ற சீனாவை" பைடென் எதிர்கொண்டார். மேலும் நாற்கரத்தை மீண்டும் புத்துயிர் பெறுவதில் ட்ரம்ப்பின் முன்முயற்சியைத் தொடர்வதற்கு அவரை பாராட்டினார்.

இந்த கருத்துரையானது நாற்கரம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நான்கு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது: தென் சீனா மற்றும் கிழக்கு சீன கடல்களில் சீனாவை எதிர்கொள்ளுதல்; "விநியோக-சங்கிலியின் பாதுகாப்பை" உறுதி செய்தல், அதாவது, ஒரு போரை எதிர்த்துப் போராட அவசியமான முக்கியமான இறக்குமதிகளுக்கு அணுகலை உத்தரவாதம் செய்வது; சீனா மீது தொழில்நுட்ப கூர்மையை பராமரித்தல் குறிப்பாக முக்கிய உயர் தொழில்நுட்ப பகுதிகளில்; மற்றும் ஆசியா முழுவதும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துதல், "வாஷிங்டனுக்கு மட்டும் சாத்தியமில்லாத வழிகளில்." நான்கு பகுதிகளும் நாற்கரத் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், நான்கு பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடயமும் அமெரிக்க இராணுவம், கணக்கிட முடியாத விளைவுகளைக் கொண்ட அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான எப்படிப்பட்ட ஒரு போருக்கும் போராடத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கடந்த தசாப்தத்தில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் திட்டங்கள் மேலும் மேலும் தெளிவாக இருந்திருக்கின்றன: இந்திய-பசிபிக் முழுவதிலும் நிலையான இராணுவக் கட்டமைப்பிலிருந்து, ஒரு அணுஆயுத போரை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்ட பாலிஸ்டிக் எதிர்ப்பு அமைப்புமுறைகள் உட்பட, பெருகிய முறையில் சீன-விரோதப் பிரச்சாரங்களானது ஜிங்ஜியாங், திபெத், மங்கோலியா, ஹாங்காங் மற்றும் தைவான் மீதான மோசடியான "மனித உரிமைகள்" பிரச்சாரங்களையும் உள்ளடக்கியது, எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவை பலவீனப்படுத்துவதையும், உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

நாற்கர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இப்பிராந்தியத்திற்கான பென்டகனின் வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்குதற்கு அவர் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா சீனாவுடன் ஐந்து ஆண்டுகளுக்குள் போரை எதிர்கொள்ளக் கூடும் என்று முன்கணித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் போரை நோக்கி விரைவாகச் செல்வது, சீனாவானது பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அதை கடந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தாலும், உள்நாட்டில் ஆழ்ந்த அரசியல் மற்றும் சமூக நெருக்கடியினால் எரியூட்டப்படும் பதட்டங்களை ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக உள்நாட்டில் திசை திருப்பவேண்டியதன் தேவைகளாலும் உந்தப்படுகிறது.

பேரழிவுகரமான உலகப் போரின் வளர்ந்து வரும் ஆபத்து குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்து, தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு அழைப்பு விடுப்பதிலும் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் சர்வதேச குழுவும் (ICFI) தனித்தே போராடுகின்றன. பிப்ரவரி 2016 இல் வெளியிடப்பட்ட “சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்” என்ற தலைப்பில் அதன் சக்திவாய்ந்த அறிக்கையில், அத்தகைய இயக்கத்தை உயிரூட்ட வேண்டிய கொள்கைகளை ICFI ஆனது கோடிட்டுக் காட்டியது:

  • போருக்கு எதிரான போராட்டமானது சமூகத்திலுள்ள மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் தொகையிலுள்ள அனைத்து முற்போக்கான கூறுபாடுகளையும் அதன் பின்னால் ஐக்கியப்படுத்த வேண்டும்.
  • புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ எதிர்ப்பும் மற்றும் சோசலிச இயக்கமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படைக் காரணமான பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்தைத் தவிர போருக்கு எதிரான தீவிர போராட்டம் எதுவும் இருக்க முடியாது.
  • எனவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து முற்றிலும் மற்றும் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் சுயாதீனமாகவும், மற்றும் பகையாகவும் இருக்க வேண்டும்.
  •  புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டுவதானது சர்வதேச அளவில் இருக்க வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ள எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Loading