பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகள் மெலோன்சோன் வாக்காளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, ஜோன்-லூக் மெலோன்சோன் ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து, பாப்பாசிட்டோவால் அதிவலது யூடியூப் வீடியோ வெளியீட்டில் தனது வாக்காளர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை கண்டனம் செய்தார். பாப்பாசிட்டோ ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதில் அவர் ஒரு அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி வாக்காளரின் உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, பின்னர் மீண்டும் மீண்டும் கத்தியினால் குத்துகிறார்.

வெளிப்படையாகவே அதிர்ந்துபோன மெலோன்சோன் கூறினார்: "நான் எச்சரிக்கிறேன், மற்றும் நான் கவனமாக என் வார்த்தைகளை தேர்வு செய்கிறேன், நம்மை சுற்றிய வாய்மொழி வன்முறைக்கு எதிராக, மற்றும் சில நேரங்களில் நாம் நிரந்தரமாக இலக்குகள் என அறிவிக்கப்பட வழிவகுக்கும் [...] சரீர ரீதியான பயங்கரவாதத்திற்கு எப்பொழுதும் முந்திய புத்திஜீவித பயங்கரவாதத்திற்கு, இப்போது அல்லது எதிர்காலத்தில், சரீர ரீதியான வன்முறையை, நாம் ஏற்றுக்கொள்ளும் இந்த நாட்டில், நாம் நம்மை அனுமதிக்க முடியாது. இது என் மீது ஏற்படுத்திய தாக்கத்தையோ அல்லது, என் நண்பர்கள் அனைவரின் விளைவையோ நான் மறைக்கவோ விரும்பவில்லை."

ஜோன்-லூக் மெலோன்சோன் (Wikimedia Commons)

உண்மையில், பாப்பாசிட்டோவின் அச்சுறுத்தல்கள் ஒரு நவ-பாசிச வீடியோ சேனலின் அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல. அவை பொலிஸ் அரசு மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் சக்திவாய்ந்த துறைகளின் அடையாளத்தைக் குறிக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் ஒரு நடவடிக்கையில் பிரான்சில் தலையிடுவதற்கு ஆயிரக்கணக்கான செயலூக்கமான சேவையிலுள்ள மற்றும் சேமப் படை பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளால் நவ-பாசிச இதழானValeurs actuelles முன்வைக்கப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இவை பின்தொடர்கின்றன.

வீடியோவில், பாப்பாசிட்டோ இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை அவமதிப்புகள் பொறிக்கப்பட்ட சட்டை மற்றும் "நான் ஒரு கம்யூனிஸ்டு" என்று பொறிக்கப்பட்ட ஒரு எழுத்துப் பொறிப்பை செய்து காண்பிக்கிறார்.

LFI கட்சி வாக்காளரின் உருவகப்படுத்தப்பட்ட கொலைக்கு செல்வதற்கு முன், பாப்பாசிட்டோ கூறுகிறார்: "இன்று நாம், இடதுசாரிவாதம் குண்டு துளைக்காததா என்பதை சோதிக்கப் போகிறோம். ஜோன்-லூக் மெலோன்சோனின் கட்சிக்கு வாக்களிக்கும் மக்களில் ஆறு சதவிகிதத்தினர் அங்கு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பார்கள், அது வரவிருக்கும் ஆண்டுகளில் நடக்கலாம். மெலோன்சோனின் கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு நபர், அது நம் நாட்டின் மீது ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்க அவருக்கு உதவுகிறதா என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம்."

பொம்மையின் தலையை துண்டித்து அதைச் சுட்டு துளைகளை ஏற்படுத்திய பின்னர் பாப்பாசிட்டோ கூறுகிறார்: "சகிப்புத்தன்மை நல்லது, மிகவும் நல்லது, அது உலகில் அவசியம். ஆனால் துப்பாக்கியுடன் சகிப்புத்தன்மையை பயன்படுத்துவது எப்போதும் நல்லது."

பாப்பாசிட்டோ யூடியூப்பில் இருந்து வீடியோவை திரும்பப் பெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், விசாரணை செய்வதற்கான அவரது கோரிக்கையையும் போலீசார் நிராகரித்தனர் என்றும் மெலோன்சோன் கூறினார். "PHAROS அமைப்பு [அறிவிப்புகளை பகுப்பாய்வு மற்றும் மீட்டெடுப்பதற்கான தளம்] எதிர்வினையாற்றவில்லை," என்று அவர் கூறினார். மெலோன்சோனுக்கு எதிராக அல்லது "கம்யூனிஸ்டு" என்று முத்திரை குத்தப்பட்ட வேறு எவருக்கும் எதிராக கொலை அச்சுறுத்தல்களை வெளியிடுபவர்களை அது பாதுகாக்கும் என்ற தெளிவான சமிக்ஞையை தெளிவான மொழியில் பொலிஸ்-அரசு அனுப்புகிறது.

எரிக் செமூர்- தீவிர வலதுசாரி விவாதவாதி, இனவாத வெறுப்புகளை ஆதரிப்பவர் மற்றும் பில்லியனர் வன்சென்ட் போல்லோரெக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி சேனலான CNews இல் நிரந்தர தொகுப்பாளராக இருக்கும் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியை ஊக்குவிப்பவர்- பாப்பாசிட்டோவை பாதுகாப்பதன் மூலம் பதிலளித்தார்: "ஜோன்-லூக் மெலோன்சோன், பாப்பாசிட்டோ என் நண்பர், நான் பாப்பாசிட்டோவை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு நல்ல புத்திசாலி என்று கூறுகிறார்."

இத்தகைய கருத்துக்கள் 2017 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மெலோன்சோனுக்கு வாக்களித்த வாக்காளர்களில் 20 சதவீதத்தினருக்கு எதிராக இழிவான கொலை அச்சுறுத்தல்களாக உள்ளன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரெஞ்சுப் பிரிவும் மெலோன்சோன் மற்றும் LFI இன் குட்டி முதலாளித்துவ ஜனரஞ்சகவாதத்துடன் எமது கொள்கை ரீதியான அரசியல் வேறுபாடுகளை ஆவணப்படுத்தியுள்ளன. எவ்வாறெனினும், பாசிசவாதிகள், ஊடகங்கள் மற்றும் பிரெஞ்சு பொலிஸ் எந்திரத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக மெலோன்சோன், LFI இன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாக்காளர்களின் பாதுகாப்பிற்கு சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்) அழைப்பு விடுக்கிறது.

இந்த அச்சுறுத்தல்கள், பல தசாப்தங்களான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரை தொடர்ந்து ஜனநாயக நெறிமுறைகளின் சர்வதேச சரிவின் ஒரு பகுதியாகும், தற்போது பெருந்தொற்று நோயை உத்தியோகபூர்வமாக கொலைகாரத்தனமாக கையாள்வதில் உள்ளது. ஆளும் வர்க்கமானது சமூக சமத்துவமின்மையின் தாங்கமுடியாத மட்டங்கள் காரணமாக மதிப்பிழந்தது மட்டுமல்லாமல், லிபியா மற்றும் சிரியாவில் இஸ்லாமிய போராளிகளுக்கு அதன் உள்ளார்ந்த ஆதரவு மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஒரு விஞ்ஞானரீதியான கொள்கையை செயல்படுத்த மறுப்பதன் மூலம் குற்றமாக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும், அரசாங்க எந்திரத்தின் பிரிவுகள் பெருகிவரும் தொழிலாள வர்க்க சீற்றத்திற்கு எதிராக அதிவலது சக்திகளை அணிதிரட்டுகின்றன.

அமெரிக்காவில், வெளியேறயிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 6 அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியைத் தொடங்கினார், வாஷிங்டனிலுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நவ-பாசிஸ்டுகளின் கூட்டத்தைத் தொடங்கி, அவரது போட்டியாளரான ஜோ பைடனின் தேர்தல் சான்றிதழைத் தடுக்கத் தொடங்கினார். ஸ்பெயினில், மெலோன்சோன் உடன் கூட்டணியில் உள்ள, பொடேமோஸ் கட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆனால் பொடேமோஸ் அமைச்சர்களால் பாதுகாக்கப்பட்ட உயர்மட்ட இராணுவ நவ-பாசிஸ்டுகள், இடதுசாரி கருத்துக்களைக் கொண்டிருந்ததற்காக "26 மில்லியன்" ஸ்பெயின் மக்களை ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் படுகொலைக்கு அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக மெலோன்சோன் கூறுவது போல், பொதுக் கருத்துகளால் அதிவலதுகள் நிறுத்தப்படுவர் என்று பக்தியுடன் நம்புவது போதாது. ஹிட்லர் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பின்னர், பரந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு பொலிஸ் எந்திரத்தின் ஆதரவுடன் ஒரு வன்முறையான அதிவலது இயக்கம் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் ஒரு பாசிசவாத பொலிஸ்-அரசு நிறுவப்படுவதற்கு எதிரான ஒரே சாத்தியமான மூலோபாயம், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, பெரும் மக்கள் தொகைகொண்ட தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், மெலோன்சோன் திங்களன்று தனது செய்தியாளர் கூட்டத்தில், பாப்பாசிட்டோவின் அச்சுறுத்தல்கள் கடந்த ஞாயிறன்று France Inter இல் அவரது பேட்டிக்கு ஒரு எதிர்வினை என்று சுருக்கமாக குறிப்பிட்டார். மெலோன்சோன் அந்தக் கருத்தை தெளிவுபடுத்தவில்லை, ஆனால் பாப்பாசிட்டோ மூலம், பிரெஞ்சு அரசியல் வாழ்வில் பொலிசாரின் செல்வாக்கு குறித்த சில விமர்சனங்களில் அவர் மிக அதிகமாக சென்றுவிட்டார் என்ற செய்தியை மெலோன்சோனுக்கு ஆளும் வர்க்கம் அனுப்புகிறது என்பது வெளிப்படை.

France Inter இல், மெலோன்சோன் 2017 தேர்தலில் நடந்தது 2022 ல் மீண்டும் நிகழப்போவதில்லை என்று எச்சரித்திருந்தார். பிரான்சின் "தன்னலக்குழு அமைப்புமுறை" "மற்றொரு சிறிய மக்ரோனை" கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கூறினார், அதன் பின்னர், "அது யார் என்று யாருக்கும் தெரியாது, பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த அமைப்புமுறைதான் அவரைக் கண்டுபிடிக்கிறது." பின்னர் அவர் 2017 ல் ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர், இரகசிய சேவைகளுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமியவாதியான கரீம் செர்பியால் பொலிஸ் அதிகாரி சேவியர் ஜுகெலே கொலை செய்யப்பட்டதில் அரசின் பங்கு பற்றிய பிரச்சினையை எழுப்பினார்.

போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதற்காக கைது செய்யப்பட்ட செர்பி, ஏராளமான துப்பாக்கிகளை சேகரித்து குவித்திருந்தார். எவ்வாறெனினும், அவர் போதுமான அளவு "ஆபத்தானவர்" அல்ல என்று கூறி பொலிசார் அவரை விடுவித்தனர். பின்னர் அவர் சாம்ப்ஸ்-எலிசே இல் ஜுகெலேவை படுகொலை செய்தார், கடந்த ஜனாதிபதி தொலைக்காட்சி விவாதத்தை இரத்து செய்ய நிர்ப்பந்தித்த பத்திரிகைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சார நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டார், தேர்தலில் மெலோன்சோனின் வளர்ச்சியை நிறுத்தி, அவரது வாக்காளர்களை மக்ரோனை நோக்கி தள்ளினார். அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளத்தால் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது:

"துப்பாக்கிதாரி என்று கூறப்படுபவரின் பின்னணி குறித்த உண்மைகள் வெளிவரும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு பாதுகாப்புப் படைகளின் கூறுபாடுகள் சம்பந்தப்பட்ட ஆத்திரமூட்டல் என்று முடிவு செய்யாதிருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய முன்னணிக்கு (FN) வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்."

2017 இல் தனது தோல்வியின் சூழ்நிலைகள் குறித்து வெளிப்படையாக அதிருப்தி அடைந்த மெலோன்சோன் France Inter இடம் கூறினார்: "அதே வழியில், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில், எங்களுக்கு சில கடுமையான சம்பவம் அல்லது ஒரு கொலை இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். 2012 இல் மேரா இருந்தது [துலூஸ் மற்றும் மொன்தோபானில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு குற்றவாளி], பின்னர் [2017 இல்] கடந்த வாரத்தில் சாம்ப்ஸ் எலிசே மீது தாக்குதல் இருந்தது [...] இவை அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்டவை."

வர்க்கப் போராட்டத்திற்கு வெளியே எதுவும் "முன்கூட்டியே எழுதப்படவில்லை" என்றால், மெலோன்சோன் தன்னுடைய விதிவசவாத கருத்துக்களால் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பார்வையில் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தார்: அதாவது அவர் பொலிஸ்-அரசின் ஜனநாயக விரோத பாத்திரம் குறித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.

சமூக-ஜனநாயக மற்றும் போலி-இடது வட்டங்கள் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அல்லாமல், மெலோன்சோனுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தைத் தொடங்கின. திங்களன்று மெலோன்சோனின் செய்தியாளர் மாநாட்டை லிபரேஷன் கண்டனம் செய்தது, இது France Inter மீதான அவரது தவறை மூடிமறைக்கும் நோக்கத்துடன் ஒரு "திசைதிருப்பல்" என்று விவரித்தது. சோசலிஸ்ட் கட்சியின் (PS) முதன்மைச் செயலாளர் ஒலிவியே ஃபோர் (Olivier Faure), 2022 இல், மெலோன்சோன் "இடது மற்றும் சுற்றுச் சூழலியலாளர்களை ஐக்கியப்படுத்துவதில் ஒருவராக" இருக்க முடியாது என்று வலியுறுத்தினார் [...] ஜோன்-லூக் மெலோன்சோன் கூறுவது ஏற்கத்தக்கதல்ல, ஏனெனில் இடதுசாரிகள் ஒருபோதும் ஜனரஞ்சகவாதத்தைப் பற்றியோ அல்லது சதிக் கோட்பாடுகளைப் பற்றியோ இருந்ததில்லை."

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA)Révolution Permanente வலைத் தளமானது செய்தியாளர் மாநாட்டை கண்டனம் செய்தது, "இது மெலோன்சோனின் பொறுப்பற்ற மற்றும் வேண்டுமென்றே வெடித்த கோபம்" என்று வர்ணித்தது. "முற்போக்கான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் ஒரு அரசியல் தலைவரிடமிருந்து வரும் ஏற்றுக்கொள்ளமுடியாத சதிக் கோட்பாடுகளுக்கு நேரடியாக உணவளிக்க சில வார்த்தைஜால அம்சங்களை" அவர் பயன்படுத்துகிறார்” என்று அது கூறியது.

NPA ஆனது இடது பக்கத்தில் இருந்து அல்ல, மாறாக வலதிலிருந்து தாக்குகிறது. லிபியாவிலும் சிரியாவிலும் பிரெஞ்சு இரகசிய சேவைகளுக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக, இந்தப் போர்கள் "ஜனநாயகப் புரட்சிகள்" என்று கூறி, பிரான்சில் ஜனநாயக உரிமைகளுக்கு பொலிஸ் எந்திரத்தால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களை NPA இப்போது மூடிமறைக்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, பொலிஸ் அரசுடன் தொடர்புடைய அனைத்து குட்டி-முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும் சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதை அவசியமாக்குகிறது. இந்த இயக்கத்திற்குள், சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு அரச அதிகாரத்தை மாற்றுவதற்கான ஒரு சோசலிச அரசியல் போராட்டத்தின் அவசியத்தை விளக்க முயற்சிக்கும்.

Loading