மனித உரிமைகள் கற்கை இலங்கையின் சிறைச்சாலைகளின் மோசமான நிலைமைகளை அம்பலப்படுத்துகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (இ.ம.உ.ஆ.கு.) நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் உள்ள சனநெரிசலான மற்றும் சித்தரவதையான நிலைமைகளை விளக்குகின்ற விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது சிறைச்சாலைகளில் கோவிட்-19 தொற்று ஆரம்பிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 2018 ஏப்ரல் மற்றும் செப்டெம்பருக்கு இடையில் நாட்டில் உள்ள 24 சிறைச்சாலைகளில் 20இல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டதாகும்.

8520 பக்கத்தை உடைய இந்த ஆய்வானது டிசம்பரின் இறுதியில் வெளியிடப்பட்டது. இதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகத்தான், நவம்பர் 11 அன்று மஹர சிறைச்சாலையில் நடந்த போராட்டத்தை சிறை பாதுகாவலர்கள் மற்றும் பொலிஸ் கொடூரமாக அடக்கியபோது 12 கைதிகள் சுட்டுக்க கொல்லப்பட்டும் டசின் கணக்கான ஏனையவர்கள் காயமும் அடைந்தனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கற்கை

இந்த சிறைக் கைதிகள் கோவிட்-19 வைரஸில் இருந்து பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பிணை வழங்கப்பட்டுள்ள அனைத்துக் கைதிகளின் விடுதலையையும் கோரினர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கட்டளையிட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. ஆயினும் 60 போராட்ட கைதிகள் குழப்பம் உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இ.ம.உ.ஆ.கு. அறிக்கையானது சிறைச்சாலை மறுசீரமைப்பக்கு கோரிக்கை வைப்பதற்காக தொகுக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆய்வானது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் மீதான குற்றப்பத்திரிகை ஆகும். ஆயினும், இ.ம.உ.ஆ.கு. உண்மையான அதிகாரம் அற்ற ஒரு பயனற்ற அமைப்பு ஆகும்.

இலங்கையின் சிறைச்சாலையின் கொள்ளவு 11,762 ஆக இருத்தல் வேண்டும் ஆனால் கடந்த மாதம் நாடானது 33,470க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

இ.ம.உ.ஆ.கு. சிறைக் கைதிகளில் அதிகமானவர்கள் நாட்டின் வறுமையான அடுக்கினர் என அவதானித்துள்ளது. “அனைத்து வயது, இனம் மற்றும் சமய குழுக்கள் சார்ந்த சிறைக்கைதிகள் அனைவரையும் ஊடறுத்துள்ள வறுமை ஒரு பிரதான காரணி” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. “ஆரம்பத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான காரணங்களாக, தமது நிதி ஸ்திரமின்மை மற்றும் வறுமையையே சிறைக் கைதிகள் பலமுறை குறிப்பிட்டனர்.”

கூடுதலாக தமது குடும்பத்தினர் அடிப்படை வருமானம் ஈட்டுகின்ற ஆண் கைதிகள், தமது குடும்பங்கள் “பல துயரங்களுக்கு” முகங்கொடுத்துள்ளதாக இ.ம.உ.ஆ.கு. இடம் கூறினர்.

பல கைதிகள் சட்டச் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாததால் சிறைத் தடுப்பில் இருந்தனர். மற்றவர்கள் பிணை கோர அல்லது அபராதம் செலுத்த முடியாததால் நெரிசலான சிறைகளில் இருக்கின்றனர்.

இந்த ஆய்வானது சிறைகளின் உள்ளே எவ்வாறு சமூக சமத்துவமின்மை தொழிற்படுகின்றது என்பதை வெளியிட்டுள்ளது. எவ்வாறெனினும், உயர்ந்த சமூக அந்தஸ்தில் உள்ள சிறைக் கைதிகள் மரியாதையுடன் நடத்தப்படுவதோடு மற்றைய கைதிகளுக்கு கிடைக்காத விஷேடமான வசதிகள் மற்றும் சலுகைகளையும் கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என அறிக்கை தெரிவிக்கின்றது. அவர்கள் சலுகையுள்ள தங்குமிடங்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகளைப் பெற முடியும். பணக்காரர்கள் சிறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.

மஹர சிறைச்சாலை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிரடிப் படையினரிடம் தமது குடும்ப உறுப்பினர்கள் பற்றி விபரம் கோருகின்றனர் (Credit: Shehan Gunasekara)

இ.ம.உ.ஆ.கு. அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை ஆயினும், செல்வந்த கைதிகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் தமது அறைகளில் குளிரூட்டிகள் மற்றும் தொலைக்காட்சிகளைக் கூட கொண்டிருப்பது பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. அதே நபர்கள் சிறை மருத்துவமனைகளில் அனுமதியை உறுதிப்படுத்தவும் மற்றும் பிரதான மருத்துவமனை விடுதிகளைப் பெறவும் முடியும்.

நரக நிலைமையிலான இருப்பிடத்தைக் குறித்து கோபமாகத் கருத்துத் தெரிவித்த ஒரு மறியல் கைதி கூறியதாவது: “இந்த இடத்தை நாம் மாற்ற வேண்டும், இந்த இடம் பிண நாற்றமடிக்கின்றது,மயானம் போலவும் இருக்கிறது. நாம் இதை மாற்ற வேண்டும்.”

சிறைக் கூடுகள் சிறியதாக இருப்பதுடன் நெரிசலானவை, போதிய காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் அற்றவை மற்றும் கடும் உஷ்னமானவை. பெரும்பாலும் மனிதாபிமானமற்ற வாழ்கை நிலைமைக்கு ஒப்பானவை என அறிக்கை மேலும் கூறுகிறது. பல பழைய சிறைச்சாலைகள் இயற்கை பேரழிவு அல்லது பேரிடர் போன்ற நிகழ்வுகளில் உயிருக்கு உண்மையான ஆபத்தாக உள்ளன. கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுக் கூடிய அளவுக்கு பாழடைந்து காணப்படுகின்றன. மூட்டை பூச்சி, கரப்பான் புச்சிகள் மற்றும் நுளம்புகள் பரவலாக உள்ளன.

இந்த வசதிகள் மிக மிக கூட்ட நெரிசலில் உள்ளன, புதிதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் துாங்க இடம் இன்றி இரவு முழுவதும் நிற்கிறார்கள், அல்லது கழிப்பறைக்கு அருகேயோ அதனுள்ளேயோ துாங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை குறிப்பிடுபிட்டுள்ளது. இந்த நிலைமைகள் கைதிகள் மத்தியில் நோய்கள் பரவுவதற்கு ஏற்றவை” என அறிக்கை மேலும் கூறியுள்ளது.

உணவு நிலைமையானது ஆபத்தானவகையில் தரமற்றதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் உள்ளதென அறிக்கை குறிப்பிடுகின்றது. அவர்கள் “இங்கே எங்களுக்குப் சரியான உணவைத் தருவதில்லை.” அரசி முறையாக சமைக்கப்படுவதில்லை, அழுகிய மரக்கறிகளை சமைக்கிறார்கள். அவர்கள் எங்களை நொய்வாய்ப்படுத்தி கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். நாங்கள் கைதிகள் என்பதால் அவர்கள் எங்களை இப்படி நடத்துகின்றனர், ஆனால் நாங்கள் ஏற்கனவே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளோம், மற்றும் எங்கள் பாதுகாப்புக்காக இந்த அதிகாரிகள் இங்கே உள்ளனர்.

“பூனைகள் மற்றும் நாய்கள் கூட அவர்கள் எங்களுக்குத் தரும் உணவைச் சாப்பிடும் என நான் நினைக்கவில்லை. இது தண்ணீர் போன்றது, அந்த உணவில் சுவை இல்லை. அவர்கள் ஒரு சிறிய அளவைக் கொடுத்தாலும், அவை கொஞ்சம் சுவையாக இருந்தாலும் கூட நாம் அதை சாப்பிடலாம். இவர்கள் எங்களை அடிமை போலவே நடத்துகின்றார்கள்.

பல கைதிகள், தாம் இன்னும் மோமான இடங்களுக்கு மாற்றப்படுவோமோ என அஞசி, புகார் செய்யப் பயப்படுகின்றனர், எனத் தெரிவித்தனர்.

சுகாதார நிலைமைகள், நீர் மற்றும் துப்பரவு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து கிடைக்காமையும் மனிதாபிமானமற்றவையாக உள்ளன. மேற்கத்தேய கழிப்பறைகள் எதுவும் இல்லை எனவும், கைதிகள் “கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் கழிவுகளை வெளியேற்றுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட நீர் அளவையே பயன் படுத்த வேண்டியுள்ள,” என எமுறைப்பாடு செய்தனர் எனவும் அறிக்கை கூறுகின்றது.

கிராமப் புறங்களில் உள்ள சிறைச்சாலையில் குழாய் நீர் வழங்கள் இல்லை. சில இடங்களில் இயற்கை மூலங்களில் இருந்து நேரடியாகத் தண்ணீரைப் பெறுகின்றனர், அவை “சேறு மற்றும் அசுத்தமானவையாக” அல்லது உப்புச் சுவையானாக இருக்கும்.

கைதிகளுக்கு நீர்ப் பயன்பாட்டிற்கு வாளிகள் வழங்கப்படுகின்றன. சில சந்தரப்பங்களில், அவர்கள் தண்ணீர், உணவு மற்றும் சிறுநீர் கழிக்க கூட ஒரே வாளியையே பயன்படுத்துகின்றார்கள்.

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதி கூறியதாவது: “நாம் இரவில் மலம் கழிக்க வேண்டுமானால்’ ஒரு பொருட்கள் வாங்கும் பொலித்தீன் பையல் இருந்து அதை கட்டி அறையின் ஒரு மூலையில் வைக்கின்றோம். காலையில் அதை கழிப்பறைக்குள் வீசுகின்றோம். நாங்கள் சிறுநீர் வாளிகளைக் கழுவுகின்றோம். இரவில் துர்நாற்றத்தை தாங்க வேண்டும். ஆரம்ப நாட்களில் நான் இங்கு வந்த போது எனது அறையில் பதினொரு பேர் இருந்தனர்.

சிறை மருத்துவமனைகளில் முறையான மருத்தவ உட்கட்மைப்புகளின் பற்றாக்குறை காணப்படுவதுடன் விசேட மருத்துவ வசதிகளில் ஒரு சில தாதியர்களே உள்ளனர். இதனால் சிகிச்சைக்கான தெரிவுகள் வரையறுக்கப்படுகின்றன. வைத்தியர்கள் பகலில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இருப்பதோடு பொதுவாக இரவில் இருப்பதில்லை. அதன் அர்த்தம் “பல கைதிகள் நோயால் இறக்கின்றனர்” என அறிக்கை தெரிவிக்கினறது.

குறைந்த அளவிலான பெண் கைதிகளே உள்ள போதும், அவர்கள் சுகாதாரமான நப்கின்களை பெறுவது உட்பட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் இவற்றையும் பிற தேவைகளையும் கொண்டுவர குடும்ப உறுப்பினர்களை நம்பியுள்ளனர். தண்டனை பெற்ற பெண்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் சிறைச்சாலைகளுக்குள் கழுவுதல் மற்றும் பிற வேலைகளைச் செய்வதன் மூலம் மட்டுமே இந்த அடிப்படைத் தேவைகளைப் பெற முடியும்.

பெண்கள் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள தங்கள் பிள்ளைகளை சிறைச்சாலைக்குள் வைத்திருக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால்! அவ் அறிக்கை கூறியது போல், இந்த குழந்தைகள் “ஆரோக்கிமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையானவற்றை, அதாவது பொருத்தாமான ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் ஆரம்பப்பாடசாலை புத்தங்களை பெறுவதில்லை.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் மொழி மற்றும் கலாச்சார தடைகள் காரணமாக உள்ளுர் கைதிகளை விட மோசமான நிலைமைகளை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை விநியோகங்கள், குளியலறை பொருட்கள் போன்றவை கிடைப்பதில்லை. இவற்றையும் மற்றும் ஏனைய தேவைகளையும் பெறுவதற்கு உள்ளுர் கைதிகளை அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.

பல கைதிகள் தாம் இன, மத பாகுபாட்டால் பாதிக்கபடுவதாக கூறினர். கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், புலிக் கைதிகள் என அழைக்கப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகின்றது, இது பிரிவினைவாத தமழீழ விடுதலைப் புலிகளைக் குறிக்கும்.

இந்த கைதிகளுக்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பு உரிமைகளோ அல்லது சட்ட உரிமைகளோ கிடையாது. இந்தக் கைதிகள் பாரபட்சங்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு “சக கைதகள் மற்றும் சிறை அதிகாரிகளால் கூட தாம் தொடர்ந்தும் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயேகம் செய்யப்படுவதாக உணர்கிறார்கள்” என அறிக்கை தெரிவிக்கின்றது.

“புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள்” என இன்னும் சுமார் 200 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே குற்றம் காணப்பட்டுள்ளனர். மற்யைவர்கள் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படாமல் கூட சுமார் 20 ஆண்டுகள் வரை தடுப்பில் உள்ளனர்.

அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை என்றாலும், பொலிஸ் சிறைக்கைதிகளுக்கு எதிரான ஆதாரமாக சித்திரவதை மூலம் பெறப்பட்டும் ஒப்புதல் வாக்குமூலங்களை சட்ட ரீதியாகப் பயன்படுத்தலாம். அவர்களின் குடும்பங்கள் இந்த “சந்தேக நபர்களை“ விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்திய போதிலும் அது பயனற்றுப் போனது.

சிறை உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கத்திடம் நிதி கோரியதாகவும், ஆனால் வழங்கப்பட்ட எந்தவொரு தொகையும் முற்றிலும் போதுமானதாக இல்லை என சில சிறை அதிகாரிகள் இ.ம.உ.ஆ.கு. இடம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மஹர சிறைச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சிறிய குற்றச்சாட்டுக்களில் இருந்த சுமார் 12,000 கைதிகள் விடுவிக்கப்பட்டடுள்ளனர். ஆயினும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, அதிக எண்ணிக்கையிலான உயர் பாதுகாப்பு செல்கள் உள்ளடங்களாக சிறைச்சாலை அமைப்பின் விரவாக்கத்தைப் பற்றி ஆராய ஒரு செயலணியை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி 12 வருட சேவையை நிறைவுசெய்த 500 முன்னாள் இராணுவ வீரர்களை சிறப்பு சிறை பிரிவுக்கு நியமிக்கவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டார். அதன் பணி “உயர்மட்ட கைதிகளை பாதுகாப்பதும் சிறைகளுக்குள் கலவரங்கனை தடுப்பதும்” ஆகும். இது இலங்கையின் உளவுத்துறையுடன் இணைக்கப்படும்.

Loading