உக்ரேன் போர் விரிவடைகையில், லித்துவேனியா ரஷ்ய பொருட்களின் மீதான தடையை விரிவுபடுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லித்துவேனியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து, பால்டிக் கடலில் உள்ள பிரிக்கப்பட்ட கலினின்கிராட் பகுதிக்கு ரஷ்யா கொண்டு செல்வதைத் தடுக்கும் பொருட்களின் பட்டியலை விரிவாக்கத் தயாராகிறது என்று லித்துவேனிய ஜனாதிபதி ஜிதானஸ் நோசேடா (Gitanas Nauseda) புதன்கிழமை ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், லித்துவேனியா கலினின்கிராட் மீது ஒரு பகுதி முற்றுகையை அமுல்படுத்தியது. இது மாஸ்கோவில் இருந்து பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலைத் தூண்டியது.

'தடைகளின் அடுத்த கட்டங்களை செயல்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்,' என்று நோசேடா ரொய்ட்டர்ஸிடம் கூறினார். 'ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஆதரவை நாங்கள் பெறுகின்றோம். ஏனெனில் இது ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட முடிவு.'

ரஷ்யாவின் பாதுகாப்பு குழுவின் தலைவர் நிகோலாய் பட்ருஷேவ், இம்முற்றுகை ரஷ்ய பதிலடியைத் தூண்டும் என்றும் இது 'லித்துவேனியா மக்கள் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கூறினார்.

'நிச்சயமாக, ரஷ்யா இந்த விரோத நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும். தகுந்த நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன. அண்மைக்காலத்தில் அவை நடைமுறைப்படுத்தப்படும்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை கூறினார்.

செவ்வாயன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதரை வரவழைத்து போக்குவரத்து தடைக்கு 'உறுதியான எதிர்ப்பு' தெரிவித்தது. கலினின்கிராட் செல்லும் போக்குவரத்து 'வழக்கமான செயல்பாட்டை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்' என்றும் இல்லையெனில் 'பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரும்' என்று அமைச்சரகம் அச்சுறுத்தியது.

'நாங்கள் ஒரு நேட்டோ உறுப்பினராக இருப்பதால், இராணுவரீதியாக ரஷ்யா எங்களை எதிருக்கும் என்று நான் நம்பவில்லை,' என்று அறிவித்து, நோசேடா ரஷ்யாவுக்கு இராணுவ ரீதியாக பதிலளிக்கத் துணிந்தார்.

கலினின்கிராட் மீதான ஐரோப்பிய ஒன்றிய/லித்துவேனியன் முற்றுகையின் விரிவாக்கம், புவியியல் அளவிலும் மற்றும் அதன் தீவிரத்திலும் போரின் விரைவான விரிவாக்கத்தின் மத்தியில் வருகிறது.

திங்களன்று, உக்ரேனிய ஆயுதப்படைகள் கருங்கடலில் கிரிமியன் தீபகற்பத்தில் செர்னெஃப்டெகாஸ் (Cherneftegaz) நிறுவனத்தின் பல எண்ணெய் துளையிடும் தளங்களை தாக்கியது. கிரிமியன் தீபகற்பம் 2014 இல் ரஷ்யாவால் தன்னுடன் இணைக்கப்பட்டது.

புதன்கிழமை, உக்ரேனியப் படைகள் ரஷ்ய எல்லைக்குள் 150 கிலோமீட்டர் உள்ளே ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள நோவோஷாக்டின்ஸ்கில், தற்கொலை ஆளற்ற விமானங்களைப் (kamikaze drone) பயன்படுத்தி தாக்குதலை நடத்தியது.

ஜூன் 22, 2022 புதன்கிழமை, ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் உள்ள நோவோஷாக்டின்ஸ்க் எண்ணெய் பதப்படுத்தும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ரஷ்ய அவசரகால அமைச்சகத்தின் தீயணைப்பு வீரர்கள் பணிபுரிகின்றனர். [AP Photo/Russian Emergency Ministry Press Service] [AP Photo/Russian Emergency Ministry Press Service]

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி, ரஷ்யாவிற்குள் தாக்குதல்களை நடத்துவதில் நாட்டுக்கு 'ஆர்வமில்லை' என்று கூறிய சில வாரங்களுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் 'அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்குவதற்கு' உக்ரேனை அமெரிக்கா ஊக்குவிக்காது என்று கூறியதை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் எந்த வகையான ட்ரோன் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்கா உக்ரேனுக்கு நூற்றுக்கணக்கான தற்கொலை ஆளற்றவிமானங்களை வழங்கியுள்ளது. இது 'சுவிட்ச் பிளேட்' (switchblade) என்று அழைக்கப்படுகிறது.

பைனான்சியல் டைம்ஸ் 'உக்ரேனின் 72 வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவின் ஒரு இடுகை ஒன்றை வெளியிட்டது: 'சில காரணங்களால், ரஷ்யாவில் நோவோஷாக்டின்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து வருகிறது'. பின்னர், அத்தகைய இலக்கை 'தற்கொலை ஆளற்றவிமானங்களை' மூலம் எதிரியினால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தினுள் 150 கிமீ ஊடுருவி தாக்கியது 'மோசமானதல்ல!'”

இதற்கிடையில், ரஷ்யா, உக்ரேனுக்குள் தொடர்ந்து பேரழிவு தரும் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது. செவ்வாயன்று உக்ரேனிய துறைமுகமான நிகோலேவில் கப்பல் கட்டும் ஆலை மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் 500 துருப்புக்கள் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

போரில் ஒவ்வொரு நாளும் 500 துருப்புக்கள் வரை இறக்கின்றனர், தினசரி 1,000 பேர் வரை காயமடைவதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு, செலென்ஸ்கி தினசரி இறப்பு எண்ணிக்கையை 60-100 என்று கூறினார்.

இந்த தாக்குதல்கள் போரின் விரிவாக்கம் மற்றும் இறப்பின் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இது உக்ரேனிய மற்றும் ரஷ்ய பிரதேசம் முழுவதும் வேகமாக பரவி வருவதுடன், மேலும் ரஷ்ய மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையே நேரடி துப்பாக்கிச் சூட்டு போராக மாற அச்சுறுத்துகிறது.

இதற்கிடையில், சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் பையித் பிரோல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்துவதை எதிர்நோக்க ஐரோப்பா தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். 'ரஷ்ய எரிவாயு முற்றிலும் துண்டிக்கப்படுவதையும் முகங்கொடுக்க ஐரோப்பா தயாராக இருக்க வேண்டும். குளிர்காலத்தை நெருங்க நெருங்க, நாம் ரஷ்யாவின் நோக்கங்களை புரிந்துகொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ், CNA இல் ரஷ்யா ஆய்வுகளின் இயக்குனர் மைக்கேல் கோஃப்மேன், 'சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் ஆகிய முக்கிய நகரங்கள் விரைவில் வீழ்ச்சியடையக்கூடும்' என்றும், இவை உக்ரேனிய பாதுகாப்புக்கு தெளிவான பின்னடைவாகும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட போர் ஆய்வு நிறுவனம் கூறியதை மேற்கோளிட்டுள்ளது'.

போர்க்களத்தில் இந்த தொடர்ச்சியான இராணுவ பின்னடைவுகளுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவை உக்ரேனை அமெரிக்க ஆதரவு கூட்டணி அமைப்பில் விரைவாக ஒருங்கிணைத்து வருகின்றன. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி இன் முக்கிய ஆலோசகரான அலெக்ஸே அரெஸ்டோவிச் புதனன்று, ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் உக்ரேன் இறுதியாக உறுப்பினராவது என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே என்று கூறினார். உக்ரேன் ஏற்கனவே நேட்டோ கூட்டணியில் 'உண்மையான' உறுப்பினராக இருக்கின்றது என அறிவித்தார்.

செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், இந்த வாரம் உக்ரேனை உறுப்பினராவதற்கான வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

மேலும், போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரி டுடா, Trimarium forum அல்லது Three Seas Initiative என்று அழைக்கப்படும், போர்-பிராந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி, உக்ரேனுக்கு 'பங்கேற்றுக்கொள்ளும் கூட்டாண்மை' என்ற அந்தஸ்தை உருவாக்கியுள்ளது என்று அறிவித்தார். Trimarium அமைப்பு கிழக்கு ஐரோப்பா முழுவதும் ரஷ்ய செல்வாக்கைக் குறைப்பதை வெளிப்படையாக நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே போலந்து, குரோஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ருமேனியா, பல்கேரியா, லாத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட கருங்கடல் மற்றும் பால்டிக் கடல்களுக்கு இடையே உள்ள பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கியது.

செலென்ஸ்கியின் ஆலோசகர் அரெஸ்டோவிச் பெருமையாக கூறினார், “நாங்கள் Trimarium இன் 13வது நாடாக ஆனோம்... மேலும் 12 Trimarium நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களாக உள்ளன. இது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கிட்டத்தட்ட பாதியளவாகும். இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எங்கள் ஒருங்கிணைப்பு தற்போது அனைவரும் மதிப்பிடுவதை விட அதிகமாக சென்றுள்ளது” என்றார்.

உக்ரேன் போர் கட்டுப்பாட்டை மீறிச் சுழலும் நிலையில், அமெரிக்கா சீனாவுடன் இராணுவப் பதட்டங்களை வேகமாக அதிகரித்து வருகிறது. நீர்வழி, அமெரிக்க கப்பல்களுக்கு மூடப்பட்டதாக சீன அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவிடம் கூறியதாகக் கூறப்பட்ட பின்னர், தைவான் ஜலசந்தியில் 'போக்குவரத்து சுதந்திரம்' என்று அழைக்கப்படும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து போர்க்கப்பல்களை அனுப்ப உத்தேசித்துள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் அறிவித்தார்.

அவர் கூறினார், 'சீனாவின் ஆக்ரோஷமான வார்த்தையாடல்கள், தைவான் தொடர்பான அழுத்தம் மற்றும் மிரட்டல் ஆகியவற்றால் நாங்கள் கவலைப்படுகிறோம்.' அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் முன்பு கூறியது போல், பறக்க, பயணம் செய்ய, மற்றும் சர்வதேச சட்டம் எங்கு அனுமதித்தாலும் அங்கு செயல்படுவதை நாங்கள் தொடருவோம். அதில் தைவான் நீரிணை வழியாக கடந்து செல்வதும் அடங்கும்.'

இதற்கிடையில், சீனா இந்த ஆண்டு இதுவரை தைவானை நோக்கி இராணுவ விமானத்தின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றை அனுப்பியுள்ளது. 29 விமானங்கள் செவ்வாய்க்கிழமை தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தன.

உக்ரேனில் போர் வேகமாக விரிவடைந்து, மற்றும் தைவான் தொடர்பாக சீனாவுடனான அமெரிக்க மோதல் தீவிரமடைந்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை 'புட்டினின் விலை உயர்வு' குறித்து உரை நிகழ்த்தினார். 'இது போர்க்காலம்' என்றும், போர் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க மக்கள் விலைவாசி உயர்வை ஏற்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

போரின் விலை அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் செனட் ஆயுத சேவைகள் குழு 2023 இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மேலும் 6 சதவிகிதம் அதிகரிக்க முன்மொழிந்தது.

ஏகாதிபத்தியப் போர், அதன் ஐரோப்பிய மற்றும் பசிபிக் பகுதிகளில் மேலும் விரிவடைவது, ஏற்கனவே அதிகூடிய பணவீக்கத்தினால் தள்ளாடி, அடுத்த ஆண்டுக்குள் பெரும் மந்தநிலை ஏற்படும் வாய்ப்பை எதிர்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

Loading