சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையில் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் எமது வேட்பாளர்களளை அறிவிப்பதில் பெருமையடைகின்றது. தலைநகர் கொழும்பில் 20 பேரும், வடக்கில் யாழ்ப்பாணத்தில் 9 பேரும் பெருந்தோட்ட பிரதேசமான நுவரெலியாவில் 11 பேருமாக மொத்தம் 41 சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மூன்று தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர்.

குறித்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் நேரடியாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்க முடியும். அதேவேளை அதன் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், கிராமப்புற வெகுஜனங்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடையும்.

சனிக்கிழமை அன்று பிரசுரிக்கப்பட்ட எமது தேர்தல் அறிக்கை, “போர், சிக்கன வெட்டுக்கள் மற்றும் சர்வதிகார ஆட்சி வழிமுறைகளை நோக்கி திரும்புவதற்கும் எதிராக, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்கத்தின் சுயாதீனமாக அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவதற்கு” பிரச்சாரம் செய்கின்றோம் என அறிவித்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பின்வரும் வேட்பாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்துகிறார்கள்.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தின் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் குழுவுக்கு, கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான, 76 வயது, விலானி பீரிஸ் தலைமை தாங்குகின்றார். அவர் பாடசாலை கல்வியை முடித்த பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யுனிச கழகத்தின் (பு.க.க.) உறுப்பினராக 1976 ஆம் ஆண்டு இணைந்தார்.

விலானி பீரிஸ்

அவர், கட்சியின் பிரதான வேலைகளில் தலைமை பாகம் ஆற்றினார். பீரிஸ், கட்சியால் முன்னெடுக்கப்பட்ட நான்கு முக்கிய தொழிலாளர் விசாரணைக் குழுக்களை வழிநடத்தினார். கொரிய சிலோன் மற்றும் அன்செல் லங்கா போன்ற சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் தொழிலாளர் முகங்கொடுத்த நிலைமைகள், ரதுபஸ்வல நீர் மாசுபடுத்தல், கொழும்பின் புறநகர் பகுதியான மீதொடமுல்லவில் குப்பை மேட்டின் பேரழிவுகரமான சரிவு ஆகியன இதில் அடங்கும்.

அவர், கட்சியின் சிங்கள மொழி பத்திரிகையான கம்கறு மாவத்த மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திலும் கட்டுரைகளை எழுதிவந்துள்ளார். தெற்காசியா பற்றியும் இலங்கையில் நகர்புற தொழிலாளர்கள் முகங்கொடுத்த நிலைமைகள் மற்றும் போலி இடது கட்சிகளின் அரசியல் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளார். பீரிஸ் கடந்த மூன்று தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

சகுந்த ஹிரிமுதுகொட அரசியல் குழு உறுப்பினரும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தலைவர்களில் ஒருவரும் ஆவார். சகுந்த, பாடசாலை மாணவனாக இருந்த போது ஆழமான சமூக பிரச்சினைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்த வேலைத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு 18வது வயதில் கட்சியின் உறுப்பினர் ஆனார். இவர், உலக சோசலிச வலைத் தளத்தில் சமூக பிரச்சினைகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கொரோனா தொற்றுநோய் உட்பட சுகாதாரம் தொடர்பாகவும் கட்டுரைகளை எழுதியுள்ளார். விஞ்ஞானதுறையில் இளமானிப் பட்டப் படிப்பை முடித்த அவர், சுற்றுச்சூழல் துறையில் முதுமானிப் பட்டப் படிப்பை முன்னெடுக்கின்றார்.

அரசியல் குழு உறுப்பினரும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் முன்னணி உறுப்பினருமான 33 வயது தினேஷ் ஹேமால், தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற கட்சியின் உறுதியான அரசியல் முன்னோக்கினால் ஈர்க்கப்பட்டு 2016ல் கட்சியில் இணைந்துகொண்டார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தில் இந்திய அரசியல், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள், பிற்போக்கு தமிழ் தேசியவாத அரசியல் கொள்கை தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகின்றார்.

72 வயதான W.A. சுனில், துல்கிரிய ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் போது 1975 ஆம் ஆண்டு கட்சியில் இணைந்து, 1977 இல் அரசியல் குழு உறுப்பினரானார். அவர் தனது தொழிற்சாலையில் 1976 இல் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் உத்வேகத்துடன் பங்குபற்றி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பிரச்சாரம் காரணமாக, ஒரு மாதத்திற்குப் பின்னர் எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுதலை செய்யப்பட்டார். அவர் ஆடைத்தொழிற்சாலை, புகையிரத திணைக்களம் மற்றும் பெருந்தோட்டத் துறையிலும் தொழிலாளர்கள் மத்தியில் உத்வேகத்துடன் செயற்படுகின்றார்.

அவர் 1989ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு படைகளால் கைதுசெய்யப்பட்டாலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும் சக்திவாய்ந்த தலையீடு காரணமாக, மூன்று நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.

யாழ்ப்பாணம்

திருஞான சம்பந்தர் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினராவார். அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் குழுவுக்கு தலை தாங்குகிறார். அவர் வடக்கு கிழக்கில் கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த பிற்போக்கு பிரிவினைவாத யுத்தத்தின் மத்தியில் 1992 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்தார். வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்து இருந்த போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தழிழ் மொழிப் பத்திரிகையான தொழிலாளர் பாதையை வாசித்த அவர், தமிழ் தேசியவாதத்திற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் மூலம் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார்.

சம்பந்தர், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சிங்கள பேரினவாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினை தேசிய  வேலைத்திட்டதிற்கும் எதிராக விட்டுக்கொடுப்பற்ற போராளி ஆவார். இவர் 2013 ல் இருந்து மூன்று தடவைகள் வடக்குப் பிராந்தியத்தில் சோ.ச.கயின் வேட்பாளர் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

திருஞான சம்பந்தர்

1998 இல் யுத்தத்திற்கும் விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சியின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்கும் போது ராசேந்திரன் சுதர்சன் உட்பட மூன்று தோழர்களுடன் சம்பந்தரும் கைதுசெய்யபட்டார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த சக்திவாய்ந்த சர்வதேச பிரச்சாரத்தைத் தொடர்ந்து ஐம்பது நாட்களுக்குப் பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை விடுதலை செய்ய விடுதலைப் புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இராசேந்திரன் சுதர்சன் 1992 இல் இருந்து கட்சியின் உறுப்பினராக உள்ளார். அவர் உள்நாட்டு யுத்தத்தின் போது வடக்கில் உள்ள ஊர்காவற்றுறை தீவில் உள்ள தனது வீட்டில் இருந்து இடம் பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்த போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்தார். எதிர் எதிர் தமிழ் தேசியவாத அமைப்புகளுக்கு இடையேயான கசப்பான உள் மோதலுக்கு மத்தியில், அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் சர்வதேச முன்னோக்கு மற்றும் இனவாதத்துக்கும் வகுப்புவாத்திற்கும் அதன் எதிர்ப்பினால் கவரப்பட்டார். கடற்தொழிலாளியான சுதர்சன் ஊர்காவற்றுறை மற்றும் வேலனையில் மீன்பிடி சமூகங்களில் உத்வேகத்துடன் பிரச்சாரம் செய்கின்றவர் ஆவார்.

மகாலிங்கம் டிலக்ஷன் 2022 இல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினராக இருக்கின்றார். அவர் யாழ்பாணத்தில் உள்ள சினிமா திரையரங்கில் வேலை செய்தபோது தமிழ் தேசியப் பிரச்சினை மீதான கட்சியின் கொள்கைகளில் உடன்பட்டு 2019 இல் கட்சியில் இணைந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லுாரியில் ஆங்கிலப் பட்டம் முடித்துள்ளார். இவர் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் ஒரு தலைவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியல் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்பவரும் ஆவார். இவர் தமிழ் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதுகின்றார்.

நுவரெலியா

கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான மயில்வாகனம் தேவராஜா, நுவரெலியா மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். யாழ்ப்பாண மாவட்டத்தில், ஒரு உள்ளூராட்சி சபையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக வேலை செய்த போது 1976 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்தார். இவர் 1983 இல் இருந்து கட்சியின் முழு நேர உறுப்பினராக வேலை செய்வதோடு இனவாத யுத்தத்தின் போது வடக்குப் பிராந்தியத்தில் கட்சியை வழிநடத்தியவர் ஆவார்.

மயில்வாகனம் தேவராஜா

தேவராஜா, தீவின் வடக்கு கிழக்கில் அமைதி காக்கும் இந்தியப் படைகளை கொண்டுவருவந்த 1987 இந்தி-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பிரச்சாரத்தில் மிக முக்கியமானவர் ஆவார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு எதிராகவும், அதே போல், இந்த உடன்படிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மேற்கொண்ட பிற்போக்கு சிங்கள பேரினவாத பிரச்சாரத்திற்கு எதிராகவும் சிஙகள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை அணிதிரட்ட போராடியது.

தேவராஜா, 1990களின் தொடக்கத்தில் இருந்து இலங்கையின் மத்திய பெருந்தோட்ட பிரதேசங்களில் பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிராக பெருந்தோட்டங்களில் சுயாதீன் தொழிலாள நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கம்பனிகள் மற்றும் அரசாங்கமும் கூட்டாக மேற்கொண்ட வேட்டையாடலுக்கு எதிராக, மஸ்கெலியாவில் உள்ள ஒல்டன் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளரை்களைப் பாதுகாக்கின்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்காக நன்கு அறியப்பட்டவர்.

67 வயதான ஐராங்கனி சில்வா, 1991 முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர், பசறை மற்றும் மீரியபத்த தேயிலை தோட்டங்கள், பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட பல தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையீடு செய்துள்ளார். இவர் 1996லும் மற்றும் மீண்டும் 2022 லும் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Loading