மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 ஓர் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் அதிக காலத்தில், இந்நோய் மீண்டும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 9,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய உருமாறிய வைரஸ்களின் வெளிப்பாட்டால் எரியூட்டப்பட்டு, புதிய நோயாளிகளின் ஏழு நாள் சராசரி கடந்த மாதத்தை விட 40 சதவீதம் அதிகரித்து, அரை மில்லியனை நெருங்கி வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, ஐந்தாவது தொடர்ச்சியான வாராந்திர அதிகரிப்பாக, கடந்த வாரம் எட்டு சதவீதம் அதிகரித்தது.
இப்போது இந்த பேரழிவின் மையமாக உள்ள பிரேசிலில், நாளொன்றுக்கு 2,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உள்ளன. அந்நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. அடக்கம் செய்ய முடியாதளவுக்கு பிணவறைகள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய சேரிகளில் பெரும்பாலான நோயாளிகளும் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படாமலேயே போகும் நிலையில், அந்நாட்டில் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களே கூட எடுத்துக்காட்டுகின்றன.
ஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 200,000 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், இந்த போக்கு அதிகரித்தும் வருகிறது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலாந்து ஆகியவை புதிய எழுச்சிகளின் மத்தியில் உள்ளன, ஹங்கேரியில் இந்த தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளில் அதன் அதிகபட்ச அதிகரிப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே 555,000 இக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அமெரிக்காவில், 24 அமெரிக்க மாநிலங்களில், குறிப்பாக மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கில், இந்த தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. அமெரிக்க உற்பத்தி மையமான மிச்சிகனில், நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளின் அபிவிருத்தி இருக்கின்ற போதிலும், உலக மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு இங்கே தீவிர திட்டம் எதுவும் இல்லை. ஐரோப்பாவின் பிரதான முதலாளித்துவ நாடுகளில் கூட, மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதேவேளையில் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் மிகக் குறைவானவர்களே தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இந்த முடிவற்ற பேரழிவிலிருந்து, இரண்டு வெவ்வேறு வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், இரண்டு வெவ்வேறு பாதைகள் எழுகின்றன. இந்த உலகளாவிய தொற்றுநோய் ஓர் உலகளாவிய வர்க்கப் போராட்டமாக முன்பினும் அதிக வெளிப்படையாக அபிவிருத்தி அடைந்து வருகிறது.
இந்நோய் மீண்டும் மீளெழுச்சி அடைந்திருப்பதற்கு மத்தியில், குழப்பமான மற்றும் ஒருங்கிணைப்பற்ற தடுப்பூசி விநியோகத்திற்கு அப்பாற்பட்டு, அமெரிக்காவின் தலைமையில், அரசாங்கங்கள், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அகற்ற முனைந்துள்ளன. பைடென் நிர்வாகம் பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, அதை செய்வதற்காக விஞ்ஞானத்தைத் திரித்து பொய்மைப்படுத்துகிறது.
ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் பகிர்ந்து கொள்ளும் மனித உயிர்கள் மீதான இந்த அலட்சியம் பிரேசிலிய ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவின் பாசிசவாத வெறியால் சுருக்கமாக தொகுத்தளிக்கப்பட்டது, அவர், “இந்த அமளிதுமுளியும், சிணுங்கல்களும் போதும். இந்த அழுகை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்து கொண்டிருக்கும்?” என்று கூறி, அந்த தொற்றுநோயால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது அவர் கோபத்தைக் காட்டினார்.
அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு அழைப்பு விடுத்த போல்சொனாரோ, பிரேசில் மக்களைக் கண்டித்தார். "எல்லாவற்றையும் மூடிவிட்டு நீங்கள் எவ்வளவு காலம் வீட்டிலேயே தங்கி இருப்பீர்கள்?” என்றார். “இனியும் இதை யாரும் தாங்க முடியாது,” என்றார்.
இந்த தொற்றுநோய் நெடுகிலும் போலவே, இப்போதும், பொது சுகாதாரத்தின் அடிப்படைத் தேவைகள் தனியார் இலாபத்திற்கும், தன்னலக்குழுவின் முடிவில்லா செல்வவள திரட்சிக்கும் அடிபணிய செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்கினர் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள், யூரோக்கள் மற்றும் யென்னை நிதிச் சந்தைகளுக்கு கிடைக்க செய்து, பங்கு மதிப்புகளைச் சாதனையளவுக்கு உயர்த்தி விட்டனர். இதன் நேரடி விளைவாக, அமெரிக்காவில் பில்லியனர்களின் செல்வவளம் 1.3 ட்ரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது, இதேபோன்ற எதிர்பாரா வருமானம் சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்குகளுக்குச் சென்றுள்ளது.
கடந்தாண்டு மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு 255 மில்லியன் வேலைகளுக்குச் சமமானதை உலகம் இழந்து விட்டதாக மதிப்பிடுகிறது, அதேவேளையில் மில்லியன் கணக்கானவர்கள் இந்த தொற்றுநோயின் பல்வேறு பேரழிவுகரமான பொருளாதார மற்றும் சமூக விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவற்றைப் போலவே, தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகமும் ஆளும் உயரடுக்கின் இலாப நலன்களுக்கும், போட்டியிடும் முதலாளித்துவ தேசிய அரசுகளின் புவிசார்-அரசியல் நலன்களுக்கும் இரண்டுக்கும் அடிபணிய செய்யப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளைத் திரட்ட முற்படும் அதேவேளையில், அமெரிக்கா, மருந்து தயாரிப்பாளர்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களை வீசியுள்ளதுடன், பொது நிதியிலிருந்து ஆராய்ச்சி செய்ய காப்புரிமைகளை அவற்றுக்கு வழங்கி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பாரியளவில் அதிக விலைக்கு விற்க அவற்றை அனுமதித்துள்ளது. இதன் விளைவாக, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க மக்கள்தொகையில் கணிசமான பிரிவுகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாமென பொது சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.
அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் அண்டைநாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் தடுப்பூசி பற்றாக்குறையைப் பயன்படுத்துகிறது. மிகவும் அதிர்ச்சியூட்டும் விதத்தில், அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் அகதிகளைத் துஷ்பிரயோகம் செய்து கலவரப்படுத்த மெக்சிகோ உடன்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்கா அதன் உயிர் காக்கும் தடுப்பூசி மருந்துளை அனுப்ப முன்வருகிறது.
ஏகாதிபத்திய நாடுகள் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு தேவையான வளங்களை ஒதுக்குவதற்குப் பதிலாக, பாரியளவில் இராணுவக் கட்டமைப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்த மாதம், இங்கிலாந்து அதன் அணுஆயுத கையிருப்பில் 40 சதவீத அதிகரிப்பை அறிவித்தது, சீனாவை அச்சுறுத்துவதற்காக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செலவினங்களை இரட்டிப்பாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த தொற்றுநோயின் எல்லா கொடூரங்களும் இப்போது இராணுவவாத வெடிப்புடனும், இறுதியில் அணுஆயுத பயன்பாட்டுடனும் இணைக்கப்பட உள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமானது, தேசியவாத மற்றும் பேரினவாத ஊக்குவிப்பதுடன் சேர்ந்து, முதலில் தடுத்திருக்கக்கூடிய பின்னர் அது வெடித்தவுடன் கட்டுப்படுத்தி இருக்கக்கூடிய ஒரு தொற்றுநோயில் மில்லியன் கணக்கானவர்களை உயிரிழக்க விட்ட அதே முதலாளித்துவத்துவ சமூக ஒழுங்கின் விளைபொருளாக உள்ளது.
இது தான் ஆளும் வர்க்கத்தின் பாதை. வர்க்கப் போராட்டம் தான் தொழிலாள வர்க்கத்தின் பாதை, இது தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, செல்வந்தர்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்து, மிகப் பிரம்மாண்டமான பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைச் சமூகத்திற்கு சொந்தமான ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாக மாற்றுவதற்கான அவசியத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கு எழுப்புகிறது.
இந்த தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தில் சமூக எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும், ஆசிரியர்களும் ஏனைய கல்வித்துறை தொழிலாளர்களும் பாதுகாப்பின்றி மீண்டும் நேரடி பள்ளி வகுப்புகளைத் திறப்பதற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த வாரம் /03/23/moro-m23.html"மொரொக்கோவில் குறைந்த சம்பளம் மற்றும் மோசமான வேலையிட நிலைமைகளை எதிர்த்து போராடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பொலிஸ் வன்முறையோடு எதிர்கொண்டது. /03/24/fran-m24.html"பிரான்ஸ் மற்றும் /03/20/poli-m20.html"பிரிட்டனில், பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. /03/23/petr-m23.html"பிரேசிலில், எண்ணெய்துறை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் மற்றும் கட்டுப்பாடின்றி நோய்தொற்று பரவுவதை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மூடியுள்ளனர்.
உலகெங்கிலும் ஒவ்வொரு இடத்திலும், தொழிலாளர்கள் ஒரே பொதுவான போராட்டத்தையும் ஒரே பொதுவான எதிரியையும் எதிர்கொள்கின்றனர். முதலாளித்துவ அரசாங்கங்கள் உருவாக்கிய இந்த பேரழிவுக்கு மத்தியில், அவசரமாகவும் சம அளவிலும் உலகெங்கிலும் தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதுடன் சேர்ந்து, அத்தியாவசியமல்லாத வணிகங்களை மூடுதல் மற்றும் நோய்தொற்று தடம் அறிவதைப் பாரியளவில் விரிவாக்குதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் கோவிட்-19 ஐ கட்டுப்படுத்த முடியும், கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இந்த தொற்றுநோய் உலகளாவியது இதை தேசிய அடிப்படையில் நிறுத்த முடியாது. இதற்கு சர்வதேச ஒருங்கிணைப்பும் விஞ்ஞான அறிவு மற்றும் மருத்துவ நிபுணத்துவமும் தேவைப்படுகிறது, இதை முதலாளித்துவமும் அதன் விளைபயனான, தேசியவாதமும், ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்கின்றன. கோவிட்-19 இக்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தைத் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முன்னெடுக்க முடியும்.
இந்த வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த இந்த மொத்த சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கிற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. இந்த வைரஸை மற்றும் அதிலிருந்து விளைந்துள்ள அனைத்தையும் ஒழிப்பதற்கு இந்த முதலாளித்துவத்தை ஒழிப்பது அவசியமாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவ கட்சிகளும் இந்த இயக்கத்தின் அரசியல் தலைமையாக உள்ளன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒழுங்கமைப்பதை மற்றும் கட்டமைப்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. நான்காம் அகிலத்தைக் கட்டமைப்பது இப்போது பிரதான முதல் தேவையாக முன்நிற்கிறது.